நிகழ்வுகள்
ஹட்டன் நகரில் சூரசம்ஹாரம்

ஹட்டன் நகரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போரிடுவதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.
ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய முன்றலிலிருந்து ஹட்டன் நகர் மத்தி வரை கொண்டு செல்லப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
அட்டன் நகர் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பெரும் எண்ணிக்கையிலானோர் இதன்போது பங்கேற்றனர் அத்துடன் தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதேவேளை இன்று 16ஆம் திகதி காலை பாரணை, திருக்கல்யாணம், திருவூஞ்சல் என்பன இடம்பெறவுள்ளது.
![]()