இலங்கை

பிரதமராகி ஜனாதிபதியாக நாமலுக்காக ‘திட்டம் பி’ தயார்

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவரை நாம் ஜனாதிபதியாக்குவோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்ச தேர்தலல்களில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் எம்மிடம் மாற்றுத் திட்டம்(Plan B) உள்ளது.

அந்த மாற்றுத் திட்டத்தின் ஊடாகவும் இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலலை நடத்தி, தேர்தல் செயற்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பயன்படுத்தி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நாமல் ராஜபக்ச அவர்களை மீண்டும் நாட்டின் ஜனாதிபதிப் பதவிக்குக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.

எனவே இன்று, நான் கூறும் இந்த விடயத்தைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் மிகவும் தெளிவான இலக்கை நோக்கியே பயணிக்கின்றோம்.

ஒருவேளை, நாமல் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டாலும், அவர் முதலில் பிரதமராகி, பின்னர் ஜனாதிபதிப் பதவியை அடைவதற்கான வேலைத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம்.

எனவே எம்மிடம் தெளிவான திட்டம் ஒன்றும், பதிலாக மாற்றுத் திட்டம் ஒன்றும் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுஜன பெரமுனவுடன் தற்போது இருப்பவர்களும், முன்னர் அந்தக் கட்சியுடன் இணைந்திருந்த அனைவரும் மீண்டும் ஒன்றிணையுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *