கட்டுரைகள்

கல்வியாளர்களும் அவர்களின் அநாகரிவுரையும்… ஏலையா க.முருகதாசன்

ஏலையா க.முருகதாசன்

ஒருவரைப் பற்றிய நன்மதிப்பு அவரின் பலதரப்பட்ட நடவடிக்கைகளிருந்தும், பழக்கவழக்கங்களிலிருந்தும் சமூகத்தினரால் எடை போடப்படுகின்றது-இந்த கட்டுரையை நான் எதற்காக எழுத வேண்டும் எழுதத் தூண்டியது எது எங்கிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்று நான் சிந்தித்த போது எனது பள்ளிப்பருவத்தில் தமிழ்மொழி பாடத்தில் எனது ஆசிரியப் பெகருந்தகைகள் கற்றுக் கொடுத்த ஒரு மேற்கோள் அல்லது உவமய அறிதலை குறிப்பிட்டுவிட்டு எழுதுவோம் என எழுதத் தொடங்குகிறேன்.

ஒருவரின் நல்ல செய்கையைப் பார்த்து ஊர் பாராட்டியது என்றும்,உலகம் பாராட்டியது என்றும் மேற்கோள் காட்டி மக்கள் சொன்ன காலத்தைத் தாண்டிப் பயணித்து ஊடகங்கள், வெகுஜன அபிப்பராயங்களை,கோபங்களை,கருத்துக்கள் மீதான முரண்பாடுகளை தமக்கூடாக மக்களிடம் கொண்டு போய்ச சேர்க்கையில் ஒருவர் மீதான மதிப்பை அவர் செய்யும் நற்சேவை பற்றியோ,அரின் நல்லறிவு பற்றியோ,அவரின் பொதுநிகழ்சுட்டிய உரைபற்றியோ குறிப்பிடுகையில் அவரைப் பாராட்டிப் புகழ்ந்து ஊரே பாராட்டியது என்று ம்,உலகமே பாராட்டுவது போல இருந்தது என்றும் சொல்லுவர்.

அது போன்று ஒருவரின் மக்களுக்கு ஒவ்வாத அநாகரீகப் பேச்சை செவிமடுத்தும் பார்த்தும் அவதானிக்கும் மக்கள் சமூகம் அவரைப் பார்த்து ஊரே நையாண்டி செய்து சிரித்தது,உலகம் அவரைக் கேவலமாகப் பார்த்துச் சிரித்தது,இவர் படித்த மனிதனா என அருவுருப்புடன் பார்த்து தமது கருத்துக்களைப் பகிரும் சமூகம் இத்தகு மனிதரைப் பார்த்துக் கோபப்படவும் செய்வார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒருவருடையு செய்கை அவரை இனம்காட்டிவிடும்.

அநாகரிக உரையையும்,அநாகரீகச் செயல்களையும் செய்யும் ஒருவர் தனது ஊர்,தனது பெற்றோர்,தனது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்.

இத்தகையோரில் கல்வியாளர்களும் இருக்கிறார்கள் என்பதை நிராகரிக்க முடியாது.சிலரின் பெயர்களைச் சொன்னாலே அவரா அப்படிச் சொன்னார் என நம்ப மறுப்பபார்கள்;

அவரின் நண்பர்களில் சிலர் அல்லது ஆதரவாளர்கள். உண்மை தெரிந்திருந்தும் அதனை மூடிமறைத்து அது பொய் அப்படிச் சொல்லவில்லையென அவரேன் அப்படிச் சொன்னார் என்பதற்காக பல காரணங்களை,பல உவமான உவமயங்களை,அந்தக் காலத்தையெல்லாம் சொல்லி சுற்றிவளைத்து அந்தக் கல்வியாளர் விட்ட தவறைப் பூசிமெழுகி நியாயப்படுத்த முயற்சிப்பார்கள்.ஆனால் அவரின் நண்பரில் சிலர் தனது நண்பர் விட்டது தவறுதான் என மனச்சாடுஇசியின் உறுத்தலால் ஒத்துக் கொள்வார்கள்.

தமிழர்களின் விடுதலைக்கென தோன்றிய ஒரு அமைப்பின் ஆலோசகர் மதியுரைஞர் என வர்ணிக்கப்பட்டவர் இலண்டனில் நடைபெற்ற மாவீரர்களை நினைவுகூரும் புனிதமானது எனக்; கருதப்படும் விழாவில் அப்பொழுது இலங்கை ஜனாதிபதயாக திருமதி.சந்திரிகா விஜயகுமாரதுங்காவை நோக்கி அவரின் தமிழர் பகுதியில் குண்டு போட்டு அழிவைத் தரும் அவரின் செயலை விமர்சிக்கும் போது அந்த ஜனாதிபதி குண்டு போடுவதில் கெட்டிக்காரி அவரிடமும் இரண்டு குண்டுகள் இருக்கின்றன என்றுஜனாதிபதியின்; உடல்சார்ந்ததைச் சுட்டி நின்று மிகவும் வக்கிரமாகச் சொன்ன போது அத்தியாக நிகழ்வுக்கு வந்திருந்த மக்களும் கைதட்டிச் சிரித்தார்கள்.

அதற்கு முன்னராக நான் இன்றைக்குத்தான் வேட்டீ கட்டியிருக்கிறேன்.வேட்டி அவிழ்ந்தால் முன்னுக்கு இருக்கிற பெண்பிரசுகள் பயந்துவிடுவார்கள் என இரட்டை அர்த்தத்தில் சொன்னார் .அதற்கும் மக்கள் ஆரவாரித்துச் சிரித்தார்கள்.இங்கெ ஒரு முக்கிய விடயத்தையும் கைதட்டி சிரித்து ஆராவரித்த தமது தரங்கெட்ட தகுதியையும் இனங்காட்டியிருக்கிறார்கள்.அறிவார்ந்து பண்பின் தரம்வாய்ந்து சபையோரும் ஒரு நிகழ்வின் தரத்தை அதன் விழுமியத்தை தமது நற்தரத்தின் மூலம் பெறுமதியாக்கிவிடுவார்கள்.

அன்றைய தினம் மதியுரைஞரின் வக்கிரத்தனமான உரையை பகுத்தறியாது கைதட்டி ஆராவாரித்து இரசித்த சiயோர் எவர் எவரோ அவர்களும் தரம்தாழ்ந்த இரசணையுள்ளவர்கள் என அறுதியிட்டுக்கூற முடியும்.
மக்களிடமும் பெருந்தவறுகள் இருக்கின்றன.எவராக இருந்தாலும் அவர் எவ்வளவு பிரபல்யமானவராக இருந்தாலும்,அவர் எவ்வளவு கல்வியாளராக இருந்தாலும் தவறு செய்பவர்களிடம் சுட்டிக்காட்டத் தவறுகிறார்கள்.

துணிவுடன் தமது கருத்தை சொல்லும் நாகரீகத்தைப் பேண வேண்டும்.அவர் படித்தவரா இல்லையா என்று ஏற்ற இறக்கப் பார்வை பார்க்கவே கூடாது.நான் மதியுரைஞர் என்று யாரைக் குறிப்பிட்டிருந்தேன் என்பதை இக்கட்டுரையை வாசிப்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

குறிப்பாக அரசியலாளர்கள் என்பவர்கள் தமது நாட்டுக்காக தமது சமூகத்திற்காக தமது நாட்டுப் பொருளாதாரத்திற்காக அரசியலறிவு மூலமாக சொல்ல,வெளிப்படுத்த,செயலாற்ற என அரசியலுக்கு வருபவர்கள்.இவர்களின் செய்கைகளை மக்கள் மிகக்கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பார்கள்.
முழுமையான எல்லா மக்களுக்குமான உயர்ந்த இலட்சிய நோக்கும் விழுமியத் திறன் கொண்ட நாட்டு அரசியல்வாதிகளை மக்கள் புடம்போட்டு தெரிவு செய்வார்கள்.

இத்தகைய அரசியலாளர்கள் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல பொதுவெளி எங்கினும் நாவடக்கம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்,சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றின் மூலமும் நன்மதிப்பு nபெற்றவர்களாக மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.அவ்வொழுக்க மேம்பாடு நாட்டையே மேம்படுத்தும்.
அத்தகைமையில்லாத அரசியல்வாதிகளை எந்த மக்கள் அவரைத் தெரிவு செய்தார்களோ,அந்த மக்களே அந்தக் குறிப்பிட்ட அரசியல்வாதியை அப்புறப்படுத்தியும் விடுவார்கள்.

அதற்கு உதாரணமாக ஜேர்மனியில் நடைபெற்ற ஒரு விடயத்தைப் பதிவு செய்கிறேன்.ஜேர்மனியில் இயங்கிவரும் எஸ்பிடி கட்சியின் பல ஆண்டுகளுக்கு முன்னரான ஆற்றலறிவுமிக்க தலைவராக இருந்தவர் திரு.எல்கோம் அவர்கள்.

அவர் தவறான ஒரு சொல்லைச் சொன்னதற்காக அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார்கள்.அடுத்து அவர்தான் ஜேர்மன் தலைவர் என்ற கணிப்பு இருந்த வேளையில் இது நடந்திருக்கிறது.அவரின் தவறு ,தவறான முன்னுதாரணமாகி நாட்டையும் கட்சியையும் தவறான வழிக்கு இட்டச் செல்லக்கூடாதென்பதற்காக இம்முடிவைக் கட்சியினர் எவ்வித சமரசமுமின்றி துணிந்து எடுத்தார்கள்.
இதற்கு சொன்ராக் பிளாற் என்ற சஞ்சிகை,அவர் அரசியலில் சறுக்கி விழுந்ததைக் கார்டடுனாக அவர் அரசியலில் வல்லமைமிக்கவர் என்பதன் ஒப்பீடாக,பெரும் மலைகளை உயர உயர பாய்ந்து கடந்துவந்த அவர் சிறுகுணிக்கல்லில் தடுக்கி விழுந்ததாகச் சித்திரம் வரைந்திருந்தது.

இப்பத்திரிகையை அப்பொழுது டியகோனி தொண்டு நிறுவனத்தில் பார்த்திருந்தேன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *