இலங்கை

மயிலத்தமடுவில் குடிசையில் தங்கியிருந்த போது சிங்களக் குண்டர்களால் கடத்தப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர் மீட்பு

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கால்நடைகளைப் பராமரிக்கச் சென்று அங்கு குடிசையில்(வாடி) தங்கியிருந்த தமிழ்ப் பண்ணையாளர் ஒருவரைப் பத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற, அத்துமீறி விவசாயம் செய்யும் சிங்களக் குண்டர்கள் அடித்து துன்புறுத்தி அவருடைய மோட்டார் சைக்கிளுடன் கடத்திச் சென்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசனின் நடவடிக்கையால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கடத்தப்பட்டது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் சம்பந்தப்பட்ட கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி,மட்டக்களப்பு மாவட்டப் பொலிஸ் பொறுப்பதிகாரி, கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பண்ணையாளரை உடனடியாக பாதுகாப்பாக விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் நேற்று புதன்கிழமை முற்பகல் அவரை மீட்டு வந்து ஒப்படைத்தனர்

இதேவேளை, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மயிலத்தமடு இலுப்பையடி வெட்டைப் பகுதியில், காசிநாதன் யோகன் என்பவருக்குச் சொந்தமான ஏழு வயது நிரம்பிய மயிலை இனப் பசுவொன்று சுட்டுக் கொல்லப்பட்டு அதனை மூன்று சிங்களவர்கள் இணைந்து உரித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டுச் சம்பவ இடத்தை நோக்கித் தமிழ்ப் பண்ணையாளர்கள் சென்ற போது, பசுவை உரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் மூன்று சிங்களவர்களும்

துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அங்ருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *