திருமலை நவம் அவர்களின் ‘இராவணன் கோட்டம்’ வரலாற்று ஆய்வு நூல் ஒரு அகலப் பார்வை…. (கன்னியா வரலாறு)…. சின்னத்தம்பி குருபரன்


வரலாறு என்பது முன்னர் இருந்த, பேணப்பட்டுப் பாதுகாத்து வந்த, ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்வியல்இ பண்பாட்டு அம்சங்களைச் சான்றாதாரங்கள் மூலமாகக் கால வரிசை ஒழுங்கில் கூறுவதாகும். நாகரிமடைந்த மக்களின் கலாசாரம், வாழ்வியல் அம்சங்கள், ஆட்சி அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள், கடந்த கால நிகழ்வுகள்இ நிறுவனங்கள்இ மாற்றங்களை நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாகவும் முறைசார்ந்தும் ஆராய்ந்து விளக்கும் துறை வரலாற்று ஆய்வு, எனப்படும்.
ஏற்கனவே அறியப்பட்ட அல்லது புதியதொரு விடயம் குறித்து ஆழமாக ஆராய்ந்து, புதிய உண்மைகளையோ விளக்கங்களையோ முறைசார்ந்த முறையில் வெளிக்கொண்டுவரும் அறிவுபூர்வமான செயற்பாடே ஆய்வு எனப்படும். இது ஏற்கனவே உள்ள தரவுகளைச் சரிபார்த்தல்இ புதிய சான்றுகளைத் திரட்டுதல், தர்க்கரீதியான பகுப்பாய்வின் அடிப்படையில் நியாயமான முடிவுகளை எட்டல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
1. வரலாற்று ஆய்வின் பிரதான அம்சங்கள்.
1. சான்றாதாரங்களை நம்பியிருத்தல்: வாய்மொழிச் செய்திகளை மட்டுமின்றிஇ கல்வெட்டுகள்இ செப்பேடுகள்இ நாணயங்கள்இ தொல்பொருட்கள்இ உத்தியோகப்பூர்வ ஆவணங்கள்இ சமகாலக் குறிப்புகள் போன்ற முதலாம் நிலைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உண்மைகள் கண்டறியப்படுகின்றன.
2. விமர்சனப் பகுப்பாய்வு : கிடைக்கப்பெற்ற சான்றுகள் உண்மையாஇ அவற்றின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதைச் சரிபார்த்துஇ பக்கச்சார்பற்ற முறையில் தர்க்கரீதியாக ஆராய்தல்.
3. காரண-காரியத் தொடர்பு: கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் எதனால் உருவானது (காரணம்)இ அதன் தாக்கம்இ சமூகம்இ அரசியல்இ பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது (விளைவு) என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
4. காலவரிசைப் பதிவு: வரலாற்று நிகழ்வுகளை அவை நடந்த காலவரிசைப் பிரகாரம் அல்லது கருப்பொருட்களின் அடிப்படையில் தொகுத்து எதிர்காலச் சந்ததியினருக்கு ஆவணமாக வழங்குதல்.
2. வரலாற்று ஆய்வு நூலொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய பிரதான விடயங்கள்.
1. ஆய்வுக் கருதுகோள்இ அறிமுகம் (ஐவெசழனரஉவழைn ரூ ர்லிழவாநளளை): ஆய்வு செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள்இ அதன் பின்னணி அதன் வரலாற்று முக்கியத்துவம் என்பவற்றை வாசகருக்கு அறிமுகப்படுத்தல்.
2. ஆதாரங்கள் மற்றும் சான்றாதாரப் பகுப்பாய்வு: முதலாம் நிலைச் சான்றுகள் (கல்வெட்டுகள்இ நாணயங்கள்இ அரச ஆவணங்கள்இ கையெழுத்துப் பிரதிகள்) மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகள் (நூல்கள்இ ஆய்வுக் கட்டுரைகள்) எவை என்பது குறித்த விளக்கம்இ அவற்றின் நம்பகத்தன்மை பற்றிய மதிப்பீடு.
3. காலஇ இட எல்லை (ளுஉழிந ரூ டுiஅவையவழைளெ): ஆய்வுக்குட்படுத்தப்படும் புவியியல் பகுதி (இடம்)இ வரலாற்றுக்காலம் குறித்த தெளிவான வரையறைகள்.
4. வரலாற்றுப் பின்னணி (ர்ளைவழசiஉயட டீயஉமபசழரனெ): குறித்த நிகழ்வு அல்லது அது நிகழ்ந்த காலம் தொடர்பாக ஏற்கனவே நிலவிய சமூகஇ அரசியல்இ பொருளாதார நிலைமைகளின் சுருக்கமான கண்ணோட்டம்.
5இ முதன்மை அலசல்கள்இ வாதங்கள் (ஊழசந யுயெடலளளை ரூ யுசபரஅநவெள): திரட்டப்பட்ட தரவுகளைக் காலவரிசைப் படுத்தியோ அல்லது கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டோ மேற்கொள்ளப்படும் விமர்சன ரீதியான பகுப்பாய்வு. இதில் ஆசிரியரின் சுயாதீனமான தர்க்க வாதங்கள் இடம்பெறும்.
6. பொருளாதாரஇ சமூகஇ பண்பாட்டுப் பரிமாணங்கள்: வெறும் அரசியல் நிகழ்வுகளை மட்டும் சுருக்கிக் கொள்ளாமல்இ அன்றைய கால மக்களின் வாழ்வியல் முறைகள்இ சமயம்இ பண்பாடுஇ பழக்கவழக்கம்இ பொருளாதாரம்இ வர்த்தக நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல்.
7. முடிவுரை (ஊழnஉடரளழைn): ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட புதிய உண்மைகள்இ பெறப்பட்ட முடிவுகள் மற்றும் அவை குறித்த ஒட்டுமொத்த மதிப்பீடு.
8. அடிக்குறிப்புக்கள்இ நூற்பட்டியல்இ பின்னிணைப்புகள் (குழழவ ழேவநளஇ டீiடிடழைபசயிhலஇ யுppநனெiஉநள): ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து நூல்கள்இ ஆவணங்கள்இ நேர்காணல்களின் பட்டியல்இ தேவையேற்படின் அட்டவணைகள்இ வரைபடங்கள்இ அரிய புகைப்படங்கள்இ கள ஆய்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வரலாற்று ஆய்வு நூல் அமைந்திருத்தல் வேண்டும்.

அத்தோடுஇ வரலாற்று ஆய்வாளர் மூலாதாரங்களைத் தேடுவதிலும்இ அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் விடயங்களை ஆதாரங்களோடும் சான்றுகளோடும் முன்வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். சொற்களைக் கையாளும்போது வசனங்களை நிறைவு செய்யும் சொல்லிலும் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். அதற்குரிய கலைச் சொற்களையும் முடிந்தவரை பயன்படுத்துவது அவசியமாகும். வரலாறு கூறும்போது தக்க சான்றுகளோடு கதை கூறும் பாங்கில் வித்துவச் செருக்கில்லாமல் பொருத்தமான நடையில் விடயங்களை முன்வைப்பது சிறப்பைத் தரும். அந்தவகையில் திருமலை நவம் அவர்களின் ‘இராவணன் கோட்டம்’ வரலாற்று நூல் பல சிறப்புக்களைக் கொண்டது.
3. நூலாசிரியர் பற்றி…
உலகறிந்த எழுத்தாளர் திருமலை நவம் என்ற புனை பெயரைக் கொண்ட சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் பல்துறை ஆளுமை கொண்டவர். இவர் நவத்தி, கோணமலையான்இ அக்கனியான் என்ற புனை பெயர்களிவும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், மின்னிதழ்கள் என்பவற்றுக்குப் பல்துறைசார்ந்த வகையில் 1966 முதல் எழுதி வருபவர்.
திருகோணமலை இந்துக ;கல்லுரியின் பழைய மாணவர். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பொதுக்கலைமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப ;பட்டத்தையும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்;கத் இருந்து 50 ஆவது பொன் விழாவை சிறப்பாக நடத்திப் பெருமை சேர்த்தவர.;
பாடசாலையில் கற்கின்ற காலத்திலிருந்து எழுத்துத் துறையில் நாட்டம் கொண்டு நாடகம், சிறுகதை, விமர்சனம, கவிதை,; அரசியல், சமயம், வரலாறு எனப் பல்துறைகளில் ஆர்வம் கொண்டவர். பேராசிரியர் கைலாசபதி, சிவத்தம்பி வழியில் இலக்கியப் பயணத்i மேற்கொண்டு வருபவர்.
திருகோணமலை, உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் அதிபராகப் 16 வருடங்கள் கடமையாற்றிப் பல தேசிய சாதனைகளை நிலை நாட்டியிருக்கிறார். தேசிய விருதுகள் அடிப்படையில் கனடா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் புலமைப்பரிசு பெற்றுச் சென்று பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர். கல்விப் பணிக்காகப் பல தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
மாணவனாக இருந்தபோது 1966 இல் ஆரம்பித்த எழுத்துப் பயணம் சிறுகதை, நாவல், விமர்சனம், கவிதை, கட்டுரை நாடகம், வரலாறு இவற்றுடன், கல்வி, சமூகப் பணி எனப் பல தளங்களல் தடம் பதித்து இன்றுவரைப் பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.
தனது படைப்புக்கள் என்ற வகையில் திருகோணமலை நாடக பாரம்பரியங்கள் (வரலாறு) திருகோணமலை கலை இலக்கிய வரலாறு, இராவண தேசம் ஆய்வு நூல்களுடன் முகைதீன் புராணம் (பாட நூலுக்கான பொழிப்புரை, 1990) தேசாந்திரம் (குறுநாவல,1990), இந்நாவல் 1990 களல் திருகோணமலையல் இடம் பெற்ற படுகொலைகள் அரசியல் போராட்டங்கள் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நாவல். ஆகயவற்றுடன் ஆறாவது நூலாக ~இராவணன் கோட்டம்| வரலாற்று ஆய்வு நூல் (2026) வெளிவந்திருக்கிறது. ஆத்துடன் ~1990| வரலாற்று நாவல் (அச்சில்) திருகோணமலை வரலாறு ஆகியனவும் வெளிவர இருக்கின்றன. ஆத்தோடு பத்திரிகைகள், சஞ்சிகைகள், மின்னிதழ் ஆகியவற்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி வருகிறார். பன்முக ஆளுமை திருமலை நவம் ஆவர்கள் சுமகால, கடந்த கால அரசியல் தொடர்பாக வீரகேசரி, தினகரன், தினக்குரல,; தமிழன் ஆகிய தேசியப் பத்திரிகைகள், வெளிநாட்டுப் பத்தரிகைகளலும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
திருமலை நவம், தேசியம், மாகாணம், மாவட்டம், பிரதேச மட்டத்திலான பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்;. கலாசார அமைச்சின் கலா+ஷணம் தேசிய விருது, மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வித்தகர் விருது, இலக்கிய நூலுக்கான பரிசு, நகர முதல்வர் விருது மற்றும் நோர்வே தமிழ் சங்கம் நடத்திய நாடக பிரதிக்கான சர்வதேச பரிசு, சர்வதேச கவிகைப் போட்டிக்கான பரிசுகளையும் பெற்றுள்ளார். அகில இலங்கை சமாதான நீதிவான், திருகோணமலை கூட்டுறவுச்சங்கத்தின் மேனாள் தலைவராகவும், தற்போது திருகோணமலை மாவட்டத் தமிழச் சங்கத் தலைவராகவும் தருகோணமலைப் பிரதேச செயலாளர் பிரிவு கலாசாரப் பேரவையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இத்தகைய பெருமையும், சிறப்பும், புகழும், பாராட்டுக்களும் பெற்ற ஒருவராலேயே இராவணன் கோட்டம் வரலாற்று நூல் எழுதப்பட்டிருப்பது பெருமைக்குரியது.
4. இராவணன் கோட்டம் நூல் பற்றி…
திருகொணமலை மாவட்டம் கன்னியா வெந்நீரூற்றையும் அச்சூழலோடு தொடர்புபட்ட ஆலயங்களையும்இ அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் அம்சங்களையும்இ காலத்துக்குக் காலம் அரச ஆதரவுடன் அப்பிரதேசக் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்பட்டதையும்இ அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்கள் நிர்க்கதி ஆக்கப்பட்டதையும்இ அப்பிரதேசத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்கு இன்றுவரையும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் பூர்வீக வரலாற்றோடு தொடர்புபடுத்தி உணர்வு பூர்வமாகக் கூறுவதே திருமலை நவம் அவர்களின் ‘இராவணன் கோட்டம்’ வரலாற்று நூலாகும்.
இந்நூல் மட்டக்களப்பு மகுடம் பதிப்பகத்தின் (110 வது) கனடா ஈழநிலா படைப்பகத்தின் வெளியீடாக 2026 இல் வெளிவந்திருக்கிறது. முன் அட்டைப்படத்தில் கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகளையும்இ இலங்கை வேந்தன் இராவணனின் புகைப்படமும்இ பன் அட்டையில் நூலாசிரியரின் புகைப்படத்துடன் ஆசிரியரையும் நூலையும் பற்றிய மகுடம் ஆசியர் வி.மைக்கல் கொலினின் குறிப்பினையும் உள்ளடக்கி இருக்கிறது. தலைப்புப் பக்கம்இ நூல் விபரம்இ சமர்ப்பணம்இ உள்ளடக்ம்இ மகுடம் ஆசிரியரின் புகைப்படத்துடன் ஆழமானஇ செறிவான பதிப்புரையும்இ கனடா ஈழநிலா படைப்கத்தின் தாபகர் யு.வு.P ரஞ்சித்குமார் அவர்களின் புகைப்படத்துடனான வெளியீட்டுரையுடனும்இ யாழ்ப்பாணப் பல்ல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி பரமு புஷ்பரட்ணம் அவர்களின் ‘காலத்துக்குப் பொருத்தமான அரிய படைப்பு’ என்ற தலைப்பில் நூல் பற்றிய விரிவான விபரணமும்இ யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி செல்லையா கிருஸ்ணராசா அவர்களின் முன்னுரையுடனும்இ வல்வை.ந. ஆனந்தராஜ் அவர்களின் புகைப்படத்துடனான விரிவானஇ விளக்கமான அணிந்னுரையுடனும்இ நூலாசியரின் மனம் திறந்து என்ற தலைப்பில் நூல் பற்றியும் இந்நூலை எழுதத் தூண்டியமைக்கான காரணஇ காரியங்களையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். எல்லாவற்றுக்குமாக ஒஒஒ11 பக்கங்களையும் கன்னியா வரலாறு கூறுவதற்கு 181 பக்கங்களையும் கொண்டதாக மொத்தம் 218 பக்கங்களில் காலத்துக்கு மிகமிக ஏற்றதாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.
5. நூல் பற்றிய பார்வை…
‘இராவணன் கோட்டம்’ வரலாற்று ஆய்வு நூலினை திறன்நோக்குப் பார்வைக்காகப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் அணுகலாம் என நினைக்கின்றேன்.
1. திருகோணமலை மாவட்டமும் கன்னியா அமைவிடமும்.
2. கன்னியா வெந்நீரூற்றுஇ சூழவுள்ள கோயில்கள் பற்றிய வரலாறு.
3. அரசஇ பௌத்தஇ சிங்கள மேலாதிக்கமும்இ அடாத்தாகக் காணி அபகரிப்புஇ புத்தர் சிலை நிறுவல்இ தாதுகோபுரம் அமைத்தலும்.
4. கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசம் தொடர்பான காணி உரிமங்களும் சிக்கல்களும்.
5. திட்டமிட்ட காணிச் சவீகரிப்பில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் பங்கு.
6. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணி அபகரிப்புக்களும் புத்தர் சிலைகள்இ தாதுகோபங்கள் அமைத்தலும்.
7. எதிர்காலத்தில் கன்னியா வெந்நீரூற்றுஇ வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சமுகமான நடவடிக்கைகள்.
1. திருகோணமலை மாவட்டமும் கன்னியா அமைவிடமும்.
கன்னியாக் கிராமம்இ வெந்நீரூற்றுக் கிணறுகள்இ அச்சூழலில் அமைந்திருந்த பல நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்கள் பற்றிய வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்வதற்கு முன்பாக திருகோணமலை மாவட்டத்தின் புவியியல் அமைவிடம்இ வரலாற்று முக்கியத்துவம்இ வரலாற்றுப் பின்னணிஇ பண்டைய ஆட்சி அதிகாரம்இ மக்களின் வாழ்வியல் அம்சங்கள்இ சமூகஇ பொருளாதார நிலமைகள்இ கோணேசர் கோயில் வரலாறுஇ தம்பலகாமம் ஆதி கோணேசர் வரலாறு பற்றியும் சுருக்கமாக விளக்குவது அவசியமாகும். ஏனெனில் கன்னியா வரலாறு என்பதுஇ இவை அனைத்துக்குள்ளும் பின்னிப் பணைந்து கலந்திருக்கின்றன. அவற்றை நிருபிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சான்றாதாரங்கள்இ இலக்கியச் சான்றுகள்இ கர்ணபரம்பரைக் கதைகள் திரியாய் அகழ்வாய்வுச் சான்றுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புற்று இருக்கின்றன. அந்தவகையில் நூலின் ஆசிரியர் திருகோணமலை பற்றியும் கன்னியாவின் புவியியல் அமைவிடம்இ கன்னியா வெந்நிரூற்றுக் கிணறுகள்இ பிள்ளையா கேஇ சிவன் கோளில்இ கன்னியா ஆறுஇ கன்னியாவுக்கு அருகில் இருந்த பூர்வீகத் தமிழ் கிராமங்கள் பற்றியெல்லாம் விரிவாக விக்கிக் கன்னியாவை அறிமுகம் கெய்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது.
2. கன்னியா வெந்நீரூற்றுஇ சூழவுள்ள கோயில்கள் பற்றிய வரலாறு.
கன்னியா வெந்நீரூற்றுஇ சூழவுள்ள கோயில்கள் பற்றிய வரலாற்றினை வரலாற்றுக்கு முற்பட்ட காலம்இ புராணஇ இதிகாச காலம் முதல் தற்காலம்வரை அகழ்வாய்வுகள்இ கல்வெட்டுக்கள்இ சாசனங்கள்இ கர்ண பரம்பரைக் கதைகள்இ இராவணனுக்கும் கன்னியாவுக்கும் இடையிலான தொடர்புஇ அகத்திய முனிவருக்கும் கன்னியா சிவன் கோயிலுக்கும் இடையிலான தொடர்பு என்பவற்றை எல்லாம் முதலநிலைஇ இரண்டாம்நிலை என ஏகப்பட்ட சான்றாதாரங்களுடன் தொடர்புபடுத்தி கன்னியாவின் வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் இராவணன் கோட்டம் என்ற நூலின்மூலம் வெளிக்கொணர்ந்து இருக்கின்றார்.
கன்னியா வெந்நீரூற்றுக்கும் இராவணனுக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்புஇ இராவணனின் பிறப்பு பற்றிய குறிப்புக்கள்இ அகத்தியர்இ குளக்கோட்டன்இ 2ஆம் கஜபாகு மன்னனுக்கும் இடையிலான தொடர்புகளும்இ அதேவேளை அங்குள்ள சிவன்இ பிள்ளையார் ஆலயங்களுக்கு இடையிலான தொடர்புகளையும் இலக்கியச் சான்றுகள்இ கர்ண பரம்பரை மற்றும் செவிவழிக் கதைகள் ஊடாகத் தெளிவுபடுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.
3. அரசஇ பௌத்தஇ சிங்கள மேலாதிக்கம்இ காணி அபகரிப்புஇ புத்தர் சிலை நிறுவல்இ தாதுகோபுரம் அமைத்தல்? அடாவடித்தனங்கள்.
இலங்கையில் இன அழிப்புஇ அடக்குமுறைஇ தமிழரின் பூர்வீகப் பிரதேசங்கள் அபகரிப்பு என்பது இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஆரம்பித்த ஒன்றல்ல. பொ.ஆ.மு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து நடந்துவரும் நிகழ்வுகள். இலங்கையின் முதல் மூத்த குடிகள் இராவணனின் வமசாவளியினரான இயக்கர்கள் (யக்சர்) அவார்கள். இவர்களோடு வேடர்களும் இருந்திருக்கின்றனர். இவர்களுக்குப் பின்னரே பொஆ.மு 8 ஆம் நூற்றாண்டளவில் நாகர்கள் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கலாம் என தீபவம்சம் குறிப்பிடுகிறது. இதிலிருந்து இவர்கள் மூன்று குடிகளுமே இலங்கையின் பூர்வத் தமிழர்கள் என்பது உறுதியாகிறது. இலங்கையில் இயக்கர்கள் சிவலிங்கத்தையும் நாகர்கள் வேலையும்இ நாகத்தையும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.
கௌதம புத்தர் பொ.ஆ.மு. 588 ஆம் ஆண்டு வைசாக மாதத்தின் விசாகப் பௌணமி நாளன்று இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவில் (டீழனா புயலய) வெள்ளரச மரத்தின் கீழ் தவமிருந்து ஞானம் (நிர்வாணம்) பெற்றார். ஞானம் பெற்று ஒன்பதாவது மாதம் (பொ.ஆ.மு 587) பொங்கல் திருநாளன்று (மஹியங்கனைக்கு) இலங்கைக்கு முதன்முதலில் வந்ததாக மஹாவம்சம் முதலாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகறது. அங்கு கங்கைக் கரையில் உள்ள பூங்காவில் கூடியிருந்த இயக்கர்களை அடக்கிஇ அவர்களை விரட்டி வெளியேற்றியதாக அறிய முடிகிறது. அங்கிருந்த நாகர்களுக்குப் பௌத்த நெறியைப் போதித்து மதம் மாற்றிபு பௌத்தத்தை நிலைநிறுத்தியதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் மகியங்கனையில் விகாரை அமைத்துத் தமிழ் பெள்த்த துறவிகள் பௌத்த மதத்தைப் போதித்து வந்தனர். இதுவே இலங்கையில் நடந்த முதலாவது நில அபகரிப்பாகும்.
புத்தர் ஞானம் பெற்று ஐந்து ஆண்டுகளின் பின்னர் (பொ.ஆ.மு 584) இரண்டாம் தடவையாக வடக்கில் நாகர் வம்சத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கிடையே நடைபெற்ற ஆட்சி அதிகாரப் போரை நிறுத்தி அமைதியைப் போதிப்பதற்காக நாகதீபத்துக்குப் (நயினாதீவு) புத்தர் வந்ததாக மஹாவம்சம்இ சூளவம்சம் ஆகிய இரு வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. அங்கு புத்தர் இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தி. “பௌத்த மதம் பரப்புவதற்கு ஏற்ற இடம் இலங்கைதான். இளக்கர் சிவலிங்க வழிபாட்டை இலங்கையில் நிலை நிறுத்திக் கொண்டு இருக்கும்வரை பௌத்த மதம் பரப்புவதற்கு ஏற்ற சூழல் இருக்காது. ஆகையினால் அவர்களை இங்கிருந்து அகற்றுதல் வெண்டும்” எனப் பௌத்த துறவிகளிடமும் நாக மன்னரிடமும கூறிச் சென்றதாக இவ்வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனைத் தொடர்ந்து நாகதீபம்இ யாழ்ப்பாணம்இ கந்ரோடை ஆகிய இடங்களில் வாழ்ந்த இயக்கர்களை விரட்டி வெளியேற்றியதாக அறிய முடிகிறது. இது இலங்கை வரலாற்றில் இரண்டாவது நில அபகரிப்பாகும்.
கௌதம புத்தர் ஞானம் பெற்று 8 வது ஆண்டில் (பொ.ஆ.மு. 581 ) களனிக்கும் (முநடயnலைய- கல்ளாணி) பின்னர் சமல மலைக்கும் (சிவனொளிபாத மலை) வருகை தந்தார் என மஹாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறது. மூன்றாவது வருகையின்போது இலங்கையின் களனி (கல்யாணி) நாக வம்சத்து மன்னனான மணிநாகன் (ஆயnயைமமாமைய – மணிஅக்கிக மன்னன்) என்பவனின் அழைப்பை ஏற்றுக் களனி நகருக்கு வருகை தந்துஇ மணிஅக்கிக மன்னனுக்கும் அவனது உறவினர்களுக்கும் அங்குள்ள நாக குல மக்களுக்கும் பௌத்த தம்மத்தை (அறநெறிகளை) உபதேசித்ததாக அறிய முடிகிறது. இந்த உபதேசத்தைக் கேட்டு அம்மன்னனும் பல நாகர்களும் பௌத்த மதத்தைத் தழுவியதாகவும் மஹாவம்சம் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் களனிஇ புத்தளம்இ சிலாபம்இ காலிஇ தெய்வந்துறஇ மாத்தறை இரத்தினபுரி ஆகிய இடங்களில் வாழ்ந்த இயக்கர்கள் விரட்டித் துரத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இது மூன்றாவது நில அபகரிப்பாகும். புத்தரின் இலங்கை வருகை தொடர்பாக ஐயங்கள் இருத போதிலும்இ சான்றுகளின்படி அவர் இலங்கைக்கு வருகைதந்து சென்ற பின்னரே பல பிரதேசங்களில் வாழ்ந்த இயக்கர்கள் ஏதோ ஒரு வகையில் அகற்றப்பட்டிருக்கின்றனர் என்பதை நூலாதாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
இந்தியாவின் வங்க தேசத்து லாட்ட மாகாணத்தில் இருந்து 700 தோழர்களுடன் நாடு கடத்தப்பட்ட விஜயன் பொ.ஆ.மு 543 இல் இலங்கையின் வடக்கில் உள்ள தம்பபன்னியை வந்தடைந்தான். இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த இயக்கர் குல இளவரசி குவேனியைத் (லீலாவதிஇ சேசதி போன்ற பிற பெபயர்கள்) திருமணம் செய்து தம்பபன்னிக்கு அரசனானான். சதி செய்து தனது 700 தோழர்களுடனும் குவேனியின் அனுசரணையுடனும் பல்லாயிரக் கணக்கான இயக்கர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆட்சி உரிமையை உறுதிப்படுத்த மதுராபுரி பாண்டிய இளவரசியைத் திருமணம் செய்து முடி சூடிய இலங்கையின் முதலாவது சிங்கள மன்னனான்.
குவேனியையும் விஜயன் மூலம் பிறந்த ஜீவகத்தா (துநநஎயாயவவய- மகன்) திசாலா (- மகள்) ஆகியோரையும் அச்சுறுத்தி இராச்சியத்தில் இருந்து வெளியேற்றினான். குவேனி தன் பிள்ளைகளுடன் அழுதுகொண்டு தனது உறவினர்களான இயக்கர்கள் வாழ்ந்த லங்கபுரிக்குச் சென்றாள். இயக்கர் இனம் அழிக்கப்டுவதற்கு பவிஜயனுக்கு உதவியவள் என்ற கோபத்தினால்இ அவளது குலத்தைச் சேர்ந்தவர்களாலே கொலை செய்யப்பட்டாள். பிள்ளைகள் இருவரும் தப்பி ஓடி மலைநாட்டுக்கு வேடுவ குலத்தவருடன் சேர்ந்து புதிய வேடுவ வம்சாவழி ஒன்று இவர்கள் மூலமாகத் தோற்றம் பெற்றது. எஞ்சியிருந்த இயக்கர் அந்தமான்தீவுஇ இலச்சதீவுஇ மடகஸ்கார் ஆகிய தீவுகளுக்குத் தப்பி ஓடஇ மீதியானோர் வேடர்களோடு கலந்துவிட்டனர். இது வரலாற்றில் நான்காவது நில அபகரிப்பாகும். அதுவரை இயக்கர்கள்இ நாகர்கள் தமிழ் நாக பௌத்தர்களோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆட்சி அதிகாரம் விஜயனின் ஆட்சியுடன் பௌத்தஇ சிங்கள ஆட்சி நிலை நிறுத்தப்படுகிறது.
உறுகுணையில் காபந்திஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் மஹாவம்சத்தை எழுதிய மஹாநாம தேரர் துட்டகெமுணுவின் மனதில் தமிழர்கள்இ தமிழ் ஆட்சியாளர்களுக்கு எதிரான துவேச உணர்வினை விசமாக ஊட்டி வளர்த்தார். அத்தீ பௌத்தஇ சிங்கள அடிப்படைவாதிகள்இ ஆட்சயாளர்களால் இன்றுவரை தூபமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 1818இ 1915இ 1956இ 1958இ 1878இ 1983 ஆம் ஆண்டுகளில் திட்டமிட்டு ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரங்கள்இ படுகொலைகள்இ 26 வருடகால உள்நாட்டு யுத்தம் ஆகியன வடக்குஇ கிழக்கில் பெரும்பாலான தமிழர்களைக் கொன்றொழித்துஇ அவர்களை விட்யடித்துஇ அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நிற்கதியாக்கினர். 2009 இல் யுத்தம் மெளிக்கப்பட்டதில் இருந்து பௌத்த சின்னங்களைத் தமிழர் பூர்வீகப் பிரதேசங்களில் தொல்பொருளியல் திணைக்களம்இ பௌத்தஇ சிங்கள அடிப்படைவாதிகள்இ பாதுகாப்புப் படையினரின் துணையுடன் விரும்பிய இடங்களில் புதைத்துவிட்டு அக்காணிகளைத் தொல்லியல் சார்ந்த பிரதேசமென அடையாளப்படுத்திஇ காணிகளைக் கபளிகரம் செய்து கொண்டிருக்கின்றனர். அத்தோடு வனபரிபாலனத் திணைக்களம் தமிழரின் பிரதேசங்கள் பலவற்றை அடையாளப்படுத்தி எல்லையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்று பௌத்த பிக்குகள் அரச ஆதரவுடன் தமிழர் பிரதேசங்களில் அத்துமீறி அடாவடித்தனமாகப் புத்தர் சிலைகளை வைத்தும்இ தாதுகோபுரங்கள்இ பன்சாலைகள் அமைத்தும்இ சைவ ஆலயங்கள்இ பள்ளிவாசல்கள்இ கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றை இடித்தழித்துஇ புனித சின்ன்ங்களைச் சிதைத்தும்இ அழித்தும் அட்டகாசங்கள்இ அடாவடித்தனங்கள் புரிந்தும் காணிகளை அபகரித்துக் கொண்டனர். இத்தகைய சம்பவம் ஒன்றுதான் கனஃனியாவில் அரசஇ தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் 2009 இன் பின்னர் வில்கம் விகாரை விகாராதிபதியினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை இராவணன் கோட்டம் என்ற வரலாற்று நூலின் மூலம் திருமலை நவம் பல்வகைப்பட்ட ஆதாரங்களுடன் நிருபித்திருக்கின்றார்.
இராமாயண காலத்தில் இருந்து தமிழரின் பூர்வீக வழிபாட்டுத் தலமாகவும்இ இறந்த ஆத்மாக்களுக்குப் பிதிர்கடன் நிறைவேற்றுகின்ற இடமாகவும் இருந்துவந்த பிள்ளையார்இ சிவன் ஆலயங்களைச் சிதைத்து அழித்துவிட்டு அவை அமைந்திருந்த காணிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் வில்கம் விகாரை விகாராதிபதியினாலும் அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டு தாதுகோபுரமும்இ பன்சாலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவங்களைப் புகைப்படங்கள்இ சான்தாரங்களோடு வெளிப்படுத்தி இருப்பது நூலாசிரியரின் துணிச்சலையும் அவரின் புலமையையும் உறுதிப்படுத்தி நிற்கிறது.
4. கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசம் தொடர்பான காணி உரிமங்களும் சிக்கல்களும்.
இற்றைக்கு 600 ஆண்டுகளுக்கு மேலிருந்து கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசக் காணி தொடர்பான உரிமங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்த இருப்பது ஆசிரியரின் ஆய்வுத் தேடலுக்கும்இ அர்ப்பணிப்புக்கும் சிறந்த சான்றாகும். போர்த்துக்கீசர்இ ஒல்லாந்தர்இ ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தளபதிகளின் குறிப்புக்கள்இ இந்நாடுகளில் இருந்து கன்னியாவுக்கு வருகை தந்த பயணிகளின் குறிப்புகள்இ 1956 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் நிலாவெளிப் பிரதேச சபைக்குப் பராதீன்படுத்தபட்ட காணி உரிமம்இ மடத்தடி மாரியம்மன் ஆலயத் தர்மகர்த்தா திருமதி கோகிலரமணி அவர்களிடம் காணப்பட்ட காணி உரிமம் தொடர்பான ஆவணங்கள்இ கன்னியா மடம்இ கன்னியா சமாதி தொடர்பான உரிமங்கள்இ தம்பலகாமம் சண்முகம்பிள்ளையிடம் இருந்த காணி உரிமைச் சான்றுகள்இ அந்தியட்டி மடப் பராமரிப்பு தொடர்பான விபரங்கள்இ சண்முகா தர்மத் தாபனத்திடம் இருந்த பத்திரங்கள்இ கடிதங்கள் அத்தோடு குளக்கோட்டன்இ 2 ஆம் கஜபாகு மன்னன் ஆகியேரின் புனருத்தாரணப் பங்களிப்புக்கள்இ வரலாற்று இலக்கியச் சான்றுகள்இ 150 வருடங்களுக்கு மேலாகக் கன்னியா வெந்நீரக் கிணறுகள் பராமரிப்புஇ பிள்ளையார்இ சிவன் ஆலயப் பராமரிப்புஇ நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பான அனைத்துச் சான்றாதாரங்களையும் திரட்டி நூலில் வெளிக் கொணர்ந்திருப்பது ஆசிரியரின் பெருமுயற்சியாகும்.
5. திட்டமிட்ட காணிச் சவீகரிப்பில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் பங்து.
இலங்கை தொல்பொருளியல் திணைக்களம் சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்து இன்றுவரை பௌத்தஇ சிங்களப் பேரினவாதிகளின் திணைக்களமாகவே செயற்பட்டு வருகிறது. ஏனைய இனம்இ மதத்தவரின் வழிபாட்டத் தலங்கள்இ தொல்லியல் தொன்மங்கள்இ சாசனங்கள்இ சான்றாதாரங்களைப் பாதுகாப்பதையும்விட பௌத்தஇ சிங்கள தொன்மங்களைப் பாதுகாப்பதிலும்இ ஏனைய இனம்இ மதத்தவரின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதிலுமே முழுமூச்சாகச் செயற்பட்டு வருகிறது. அத்திணைக்களத்திற்கு இன்றுவரைச் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எவரும் நியமனம் செய்யப்படாமல் இருப்பது திட்டமிட்ட சதி வேலைகளைச் செய்வதற்கு என்பது வெளிப்டையாகிறது.
கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகள்இ பிள்ளையார்இ சிவன் கோயில்கள் தொடர்பான பிரச்சினைகள் பூதாகரமாதற்குக் காரணமாக இருந்தவர்கள் தொல்பொருள் திணைக்களத்தினர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்கள் சகல இன மதத்தவர்களுக்காகவும் பணியாற்றி இருந்திருந்தால் நாட்டில் தோன்றிய இனம்இ மதரீதியான பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.
இது போலவே வட மாகாணத்தில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்புக் குளம் அருகில் உள்ள குருந்தூர்மலைப் பகுதியில் பழைமையான -சைவ சமய வழிபாட்டுத் தலங்கள் இருந்ததாகக் கூறப்படும் சூழலில்இ அங்கு தொல்பொருளியல் திணைக்களத்தின் அனுசரணையோடு புதிய பௌத்த விகாரையும் பன்சாலையும் கட்டப்பட்டமை. வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை தமிழர்களின் பாரம்பரிய ஆதிசிவன் வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகின்றது. தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியதை அடுத்துஇ அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்துவதற்குப் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டதோடுஇ அங்குள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களும் தொடர்ச்சியாகப் பதிவாகிஇ நீதிமன்ற விசாரணைகளும் மக்கள் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது போன்றதொரு நிகழ்வாகவே யாழ்ப்பாண மாவட்டம் தையிட்டியில் அத்துமீறிய விகாரை அமைப்பும் பல எதிர்ப்புகள்இ ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் புத்தர் சிலை வைத்தோடு விகாரைஇ பன்சாலை ஆகியனவும் அமைத்துக் கொண்டனர். அதேபோல் மன்னாரஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களிலும் பல சம்பவங்கள் 1983 க்குப் பின்னர் இருந்து நடைபெற்று வந்து 2009 இல் உள்நாட்டு யுத்தம மெளிக்கப்பட்டதில் தொடர்ந்து பெருவாரியான சம்பவங்கள் இடம்பெற்றுப் பல்லாயிரக்கணக்கான ஹெக்டெயர் தமிழர் பூர்விக நிலங்கள் தொல்பொருளியல் திணைக்களம்இ வனபரிபாலனத் திணைக்களத்தினாலும் புத்தர் சிலை வைப்புஇ விகாரை அமைப்புஇ முப்படையினருக்கான முகாம் அமைப்பு என்பவற்றுக்காகவும் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.
கன்னியா வெந்நீரூற்று மற்றும் கோயில்கள் அமைந்திருந்த காணி உரிமம் தொடர்பான ஆவணங்கள் இருந்தும் தொல்பொருளியல் திணைக்களம் பௌத்த தொன்மம் என்ற கடிவாளத்தைப் போட்டுக் காணிகள் யாவையும் அடாத்தாக அபகரித்துக் கொண்டது. தொல்லியல் மரபுரிமைகள் சட்டத்துக்கு அமைவாகத் தொல்பொருளியல் திணைக்களம் நீதிமன்றத்துக்குக் கொடுத் அறிக்கைக்கு அமைவாகவே திருகோணமலை உயர் நிதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பானது ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு பிடித்த’ கதையாகிவிட்டது என வேதனையோடு குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.
கன்னியாப் பிரதேசத்தில் தமிழரின் பூர்வீகக் காணிகளைத தொல்பொருளியல் திணைக்களமும் வில்கம் விகாரை விகாராதிபதியும் அபகரித்தெடுக்க உயர் நீதிமன்றத் தீர்ப்பும் தொல்பொருளியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையின்படியே அமைந்திருந்தது என நூலாசிரியர் திருமலை நவம் வேதனையோடு பதிவு செய்திருக்கின்றார். 2002 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய பூர்வீகக் காணி மீட்புப் போராட்டத்துக்குக் கடுகு போல் பிள்ளையார் கோயில் அமைப்பதற்குப் பல்வேறு நிபந்தனைகளுடன் 10 குழி (பேர்ச்) நிலம்தீர்ப்பின் மூலம் கிடைத்தமையை வேதனையோடு நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
6. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணி அபகரிப்புக்களும் புத்தர் சிலைகள்இ தாதுகோபங்கள் அமைத்தலும்.
வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் பெருமளவு தமிழ் மக்களின் பூர்வீகக் காணி அபகரிப்புக்களும் புத்தர் சிலைகள்இ தாதுகோபங்கள் அமைத்தலும் கூடுதலாக முல்லைத்தீவுஇ மன்னர்இ வவுனியாஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டற்களில் நிகழ்ந்திருக்கின்றன. சிறுபான்மையினர் பௌத்தஇ சிங்கள பேரினவாதிகளால் பௌத்த நாடு என்ற அடிப்படைவாத மேலாதிக்கக் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக 1915 இல் இருந்து இன்றுவரை அடக்கி ஒடுக்கி வந்தத்டுஇ வடக்குஇ கிழக்குஇ மலையகம் ஆகிய பிரதேசங்களில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்குவதற்காகக் கலவரங்களைத் தூண்டிவிட்டும்இ ஸ்ரீமா-சாத்திரி ஒப்பந்தம்இ ஸ்ரீமா-காந்தி ஒப்பந்தம்இ காணி அபகரிப்புஇ இனப்படுகொலைஇ யுத்தம்இ புத்தர் சிலை வைப்புஇ தாதுகோபுரங்கள் அமைத்தல்இ அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் என பல்லாயிரக் கணக்கான ஹெக்டெயர் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் ஊடாக அல்லைஇ பதவியாஇ கந்தளாய் ஆகிய திட்டங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர.. 1958 இன் பின்னர் பதவியாவில் இருந்து தமிழர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுஇ தமிழர் தொன்மங்களும் அழிக்கப்பட்டு முழுச் சிங்களக் குடியேற்றக் கிராமமாக மாற்றப்பட்டது. முதலிக்குளம் என்ற தமிழ்க் கிராமம் மொறவெவ என மாற்றப்பட்டுத் தமிழர்கள விரட்டி அடிக்கப்பட்டார்கள். அதேபோல் பெரியவிளாங்குளம் மகாதிபுல்வெவ என மாற்றப்பட்டு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அத்தோடு சேருவில என்ற தேர்தல் தொகுதியும் உருவாக்கப்பட்டது. 1958 இன் பின்னர் இருந்து திருகோணமலை மாவட்டத்தில் இது போன்று பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை அபகரித்துஇ திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழர்களைச் சிறுபான்மையாக்கும் செயலைத் திட்டமிட்டுக் கச்சிதமாக நிறைவேற்றி இருக்கின்றனர்.
இவ்வாகத் திருகோணமலை மாவட்டத்தில் நிகழ்ந்த காணி அபகரிப்புக்கள்இ திட்டமிட்ட குடியேற்றங்கள்இ நிலத் தொடர்பு துண்டிப்புக்கள் (வெலிஓயாஇ நேருவில)இ அத்துமீறிய அடாவடித்தனமான புத்தர் சிலை வைப்புக்கள்இ விகாரைகள்இ பன்சாலைகள் அமைத்தமைஇ இதற்கு அரச படைகளும் தொல்பொருளியல் திணைக்களம்இ வனபரிபாலனத் திணைக்களம் ஆகியன பக்கபலமாக இருந்தன என்பதையும் வேதனையோடும் பல்வகைப்பட்ட ஆதாரங்களோடு மண்ணையும் மக்களையும் உயிர் மூச்சாக நேசித்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
8. எதிர்காலத்தில் கன்னியா வெந்நீரூற்றுஇ வழிபாட்டுத் தலங்கள்இ காணி தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சுமுகமான நடவடிக்கைகள்.
கன்னியாவிலுள்ள தமிழர்இ தொன்மங்கள்இ பூர்விக நிலம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காகக் கன்னியா மரபுரிமை அமைப்புஇ தென்கயிலை ஆதினம்இ இராவண சேனா அமைப்புஇ அகத்தியர் ஆதினம்இ மடத்தடி மாரியம்மன் ஆலயத் தர்மகர்த்தாஇ இளைஞர் அமைப்புக்கள்இ சைவ சமய அமைப்புக்கள்இ அரசியல் கட்சிகள் யாவும் அமைதி வழியிலும்இ எதிர்ப்புஇ ஆர்ப்பட்டம்இ பேரணிஇ கலந்துரையாடல்கள்இ கடிதங்கள்இ பொலிஸில் முறைப்பாடுஇ சனாதிபதி மற்றும் அமைச்சருடனான சந்திப்புக்கள்இ பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரைஇ திருகோணமலை மாவட்டச் செயலகத்தல் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்வெற்ற கலந்துரையாடல் யாவும் தோல்வியில் முடிந்த பின்னர் இவிடயத்தில் ஆர்வம் கொண்ட சில சட்டத்தரணிகளின் ஆலொசனைக்கு இணங்க இறுதி முயற்சியாகத் திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இறுதித் தீர்ப்பில் தீர்ப்பில் தமது கோரிக்கை நிறைவேறாமையை மனம் நொந்துஇ ஏமாந்துஇ வேதனையோடு தருமலை நவம் இந்நூலில் பதிவிட்டிருக்கின்றார்.
கன்னியாப் பிரதேசத்தின் தொன்மைஇ தொன்மங்கள்இ வெந்நீரூற்றுக்கள்இ பிள்ளையார்இ ஆதிசிவன் ஆலயங்கள் அவைற்றோடு தொடர்புடைய நிலம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக நூலாசிரியர் பல ஆலொசனைகளை முன்வைத்திருக்கின்றார். அவை மாத்திரமின்றி மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மேலதிகமாக தொன்மைசார் வழிபாட்டுத் தலங்களைப் புனரமைத்துப் பாதுகாப்பதற்கும்இ நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட காணியின் பரப்பளவைக் கூட்டுவதற்கும்இ வெந்நீரூற்றுக் கிணறுகளின் பாதுகாப்புஇ பராமரிப்புத் தொடர்பாகத் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசோடும் தனிப்பட்ட முறையில் சனாதிபதியோடும் புரிந்துணர்வோடு காலம் தாமதிக்காது உயர்மட்டப் பேச்சுகள் நடத்தினால் சைவ சமயத்தவர்களுக்குச் சாதகமான தீர்வுகள் கிட்டலாம். இது செய்யாமல் தாமதித்துச் சிலவேளை இனவாத அரசு ஒன்று ஆட்சியை அமைக்குமேயானால் தற்பொழுது இருப்பதும் இல்லாமல் போகலாம். ஏனெனில்இ சிங்களஇ பௌத்த இனவாதிகளின் கணிப்பில் ‘இது ஒரு சிங்கள நாடு’. அதற்கு தூபமிடும் வகையிலான அத்துமீறலை மேற்கொள்வதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர்இ அத்துரலிய ரத்தின தேரர்இ அம்பிட்டிய ரத்தின தெரர் (மட்டக்களப்புஇ ரஜமகா விகாரை விகாராதிபதி)இ பலாங்கொட கசப்ப தேரர் (கஜ்ஜூ மல்லி)இ அம்பிட்டிய சீலவஞ்ச திஸ்ஸ தேரர் (வில்கம் விகாரை விகாராதிபதி) அவர்களோடு ஒத்தூதக்கூடிய தேரர்கள்இ போன்ற தீவிர இனவாதத் தேரர்களும்இ அரசியலுக்காக இனவாதம் பேசும சரத் வீரசேகரஇ உதய கம்மன்பிலஇ விமல் வீரவஞ்ச போன்ற அரசியல் கோமாளிகள் உட்பட முன்னாள்இ இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்இ தீவிர இனவாதப் போக்குடைய பௌத்த சிங்கள மக்களும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென ‘இலவு காத்த கிளிகள்’ போல் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் மறந்துவிடலாகாது.
6. கருத்தும் முடிவும்.
திருமலை நவம் அவர்கள் இராவணன் கோட்டம் என்ற கன்னியா தொடர்பான வரலாற்று நூலின் மூவம் தன்னை ஒரு வரலாற்று ஆய்வாளன் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றார். ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை கதை கூறுவது போல் ஒவ்வொன்றையும் தக்க சான்றாதாரங்களின் துணையுடன் நிறுவிச் சென்றிருப்பது தனிச் நிறப்பாகும். பூர்வீக காலம்தொட்டு கண்டறியப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட முதல்நிலைச் சான்றுகள்இ புகைப்படங்கள்இ உரிமப் பிரதிகள்இ குறிப்புக்கள்இ கடிதங்கள்இ இலக்கியச் சான்றுகள்இ கர்ணபரம்பரைக் கதைகள்இ அறிக்கைகள்இ தீர்ப்புக்கள்இ நேர்காணல்கள் என்பவற்றைத் தக்க இடங்களில் பதிவிட்டு ஒவ்வொரு சம்பங்களையும் நினைவுபடுத்தி இருக்கின்றார். இந்த நூலை வாசிக்கும்போது சான்றாதரங்களைத் தேடுவதில் நூலாசிரியருக்கு இருந்திருக்கின்ற தேடலின் மீதான ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் அறிய முடிகிறது.
இராவணன் கோட்டம் என்ற வரலாற்று நூலைச் சீர்தூக்கிப் பார்த்தபோது கண்ணுறுபட்டால்பேல் சில தவறுகளையும் குற்றங்களையும் அவதானிக்க முடிந்தன. இன்று வெளிவரும் பெரும்பாலான நூல்களின் அட்டைப் படங்கள் இருள் சூழ்ந்த வர்ணத்தில் காணப்படுகின்றன. இந்நூலில் ஓரளவு தெளிவு காணப்படுகிறது. திருமலை நவம் என்பது இரு சொற்களிலான உலகறந்த புனை பெயர். இப்பெயர் ‘திருமலைநவம்’ என ஒரு சொல்லாக முன்னட்டைஇ தலைப்புப் பக்கம்இ வலப்புறப் பக்கங்களின் பக்க இலக்கத்துக்கு முன்னாலும் தொடர்ந்து வருகின்றன. இது ஒரு வரலாற்று நூல்இ ஆகையினால் நூல் விபரப் பட்டியல் ஆங்கிலத்திலும் இடப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மொழி தெரியாதவர்கள் பல்வேறு தேவைகளுக்காக (உதா.நூலகம்) இநூலைக் குறைந்தபட்சம் பட்டியல் இடுவதற்காகவேனும் பயன்படுத்தலாம். பக்க வடிவமைப்புஇ எழுத்தளவுஇ எழுத்தின் கருமைஇ புகைப்படங்களின் தெளிவுஇ உள்ளடக்கத் தலைப்புக்கள்இ உபதலைப்புக்கள்இ சரவை பார்த்தல்இ ஆண்டுகள்இ தரவுகள் தகவல்கள் என்பவற்றிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நூலின் உள்ளடக்கத்தை அத்தியாயங்களாகப் பிரித்துஇ தலைப்புக்கள்இ உப தலைப்புக்கள்இ உப உப தலைப்புக்கள் எனப் பிரித்துத் திட்டமிட்டுஇ ஒழுங்கமைத்து விடயஙகளை நகர்த்திச் சென்றிருப்பின் நூலின் சில இடங்களில் வரும் கூறியது கூறலைத் தவிர்த்திருக்கலாம். எனது ஆய்வுக்காகத் தலைப்புக்கள் பிரித்துக் காட்டியிருக்கின்றேன். இந்த நூலுக்கான இறுதிச் சரவை மிக அவதானமாகப் பார்த்திருந்தால் சில தவறுகளைத் தவிர்த்திருக்கலாம். இந்நூலில் மூலாதாரங்களை மிகத் தாராளமாகக் காட்டி இருக்கின்றார். அந்த ஆதாரங்கள் தொடர்பான அடிக்குறிப்புக்கள்இ எடுத்தாளப்பட்ட நூல் விபரப் பட்டியல்இ பின்னிணைப்பு என்பனவும் சேர்க்கப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இந்நூலில் சில தவறுகள்இ குற்றங்கள்இ விடுபடல் என்பன இடம்பெற்றிருந்தாலும் வடிவம்இ உருவம்இ உள்ளடக்கம்இ உத்திஇ கனதிஇ முக்கியத்துவம் கருதி பொக்கிசமாகப் பாதுகாக்கப்பட வெண்டிய நூல். இந்த நூலின் மூலம் திருமலை நவம் அவர்கள் சர்வதேச ரீதியாக வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளப்படுவார். இந்நூலை அவர் இத்தனை ஆழமாகச் சான்றாதாரங்களுடன் எழுதுவதற்றுரிய விசேடமான காணமாக்க கன்னியாப் பூர்வீக மண்ணோடு ஆர்த்மாத்தமாக இணைந்திருந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை பெருமையும் சிறப்பும்மிக்க நூலோடு மேலும் பல நூல்கள் எழுத வேண்டும்இ அதற்கு ஆரோக்கியமான வாழ்வும் நீடித்த ஆயுளும் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
![]()
