இலங்கை

புலிகள் மீதான தடையை கனடா நீக்க வேண்டும்; அந் நாட்டு எதிர்க்கட்சியிடம் சிறீதரன் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப் பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இச்சந்திப்பில் கல்கரி ஹெரிடேஜ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், கொன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பா னவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவின் உபதலைவருமான சுவலோய் மஜும்தார், ஒன்ராறியோ மாகாணத்தின் அரோரா-ஒக் ரிட்ஜஸ்-ரிச்மண்ட் ஹில் தொகுதி பாரா ளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெ காகிஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவ டைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலை யில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணு
வதற்கான அவசியத்தை கனடா மறுபரி சீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கனடா இவ்விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெ டுத்து தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இச்சந்திப்பில் இரண்டாவது முக்கிய விடயமாக, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங் களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து
கலந்துரையாடப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர் பான விசாரணைகள் நம்பகத்தன்மையு டனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும், மனித எச்ச ங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப் பதற்குத் தேவையான நவீன தடயவியல் கருவிகளும் அவசியமானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்காக கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுப்ப தற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் மீதான தடையை நீக்குவதற்கான நட வடிக்கைகள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்கான சர்வதேச தடயவியல் உதவிகள் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பாக கட்சித் தலைமை யுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர் அமலிதனும் அவரது குழுவினரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *