இலங்கை

இலங்கையில் நீண்ட தலைமுடி, உடலில் பச்சை குத்தியிருந்தால் தண்டனை?

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ தொடர்பான புதிய சட்டமூலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (20) விளக்கமளித்துள்ளார்.

நீண்ட தலைமுடி வைத்திருப்பது அல்லது உடலில் பச்சை குத்தியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு ஒருவரைக் கைது செய்வதற்கு இந்தச் சட்டமூலத்தில் ஏற்பாடுகள் உள்ளதாகப் பரவி வரும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.

இலங்கையில் நீண்ட தலைமுடி, உடலில் பச்சை குத்தியிருந்தால் தண்டனை? நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் | Penalty In Sri Lanka For Long Hair And Tattoos

விமர்சனங்கள்

 

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சமூக ஊடகங்களில் முன்வைத்திருந்த விமர்சனங்கள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதில் துறைசார் சட்ட நிபுணர்கள் பங்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான அடிப்படையற்ற ஏற்பாடுகள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சட்டமூலத்தில் உள்ள ஏதேனும் ஏற்பாடுகள் தொடர்பில் தனிநபர்களுக்கோ அல்லது தரப்பினருக்கோ ஆட்சேபனைகள் இருந்தால், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கான முழுமையான வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமூலத்தில் உள்ள தனித்தனி சரத்துகளில் ஒன்றிரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முழுச் சட்டமூலத்தையும் மதிப்பிடுவது நியாயமான அணுகுமுறையல்ல எனக் குறிப்பிட்ட அவர், சட்டமூலத்தை ஒட்டுமொத்தமாக ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, மனித உரிமைகளைப் பாதுகாப்பதுடன் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், சட்டமூலத்தின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், ஊடகங்களில் விவாதிப்பதை விட நீதிமன்ற மீளாய்வுக்கு உட்படுத்துவதே பொருத்தமான நடவடிக்கை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *