பலதும் பத்தும்

இரவிலும் பகல் வெளிச்சம் ; பூமிக்கு சூரிய ஒளியைத் திருப்பிவிடும் செயற்கைக் கோள்கள்

இரவு நேரத்திலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்யும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக, அமெரிக்காவின் ரிப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனம், இந்தியாவின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனம், விண்வெளியில் பெரிய பிரதிபலிப்புக் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, அவற்றின் மூலம் சூரிய ஒளியை பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பேரிடர் காலங்களில் இரவு நேர மீட்புப் பணிகளுக்கு வெளிச்சம் வழங்கவும், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் கூடுதல் நேரம் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இரவிலும் பகல் வெளிச்சம் ; பூமிக்கு சூரிய ஒளியைத் திருப்பிவிடும் செயற்கைக்கோள்கள் | Night Satellites Reflect Sunlight Back Earth

மேலும், தொலைதூரத் தொழில் பகுதிகளில் பணிநேரத்தை நீட்டிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது வெளிச்சம் வழங்கவும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தேவையான பகுதிகளில் சுமார் 5 கிலோமீட்டர் பரப்பளவுக்கு சூரிய ஒளியைச் செலுத்த முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒளியின் பிரகாசத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தேவையான நேரத்தில் ஒளியை நிறுத்தவும் முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ‘விக்ரம்’ ரக ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

முதல் செயற்கைக்கோள் ‘விக்ரம்-1’ ராக்கெட் மூலமும், இரண்டாவது செயற்கைக்கோள் தற்போது உருவாக்கப்பட்டு வரும் ‘விக்ரம்-1யூ’ ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விண்வெளியில் இருந்து சூரிய ஒளியைப் பூமிக்குப் பிரதிபலிக்கும் முயற்சி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இரவிலும் பகல் வெளிச்சம் ; பூமிக்கு சூரிய ஒளியைத் திருப்பிவிடும் செயற்கைக்கோள்கள் | Night Satellites Reflect Sunlight Back Earth

கடந்த 1993-ஆம் ஆண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் ‘ஸ்னாம்யா’ திட்டத்தின் கீழ், சுமார் 65 அடி நீளமுள்ள பிரதிபலிப்புக் கண்ணாடியை விண்வெளியில் நிலைநிறுத்தி, அதன் மூலம் பூமியில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்தனர்.

இந்தச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றபோதிலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

தற்போது அமெரிக்க நிறுவனமும் இந்திய விண்வெளி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த முயற்சி வெற்றியடைந்தால், இரவு நேர வெளிச்சம், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *