கைதானவரைப் பிணையில் விடுவிக்க கோழி இறைச்சியை இலஞ்சமாகக் கோரிய சார்ஜன்ட்

கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்காக கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரிய சம்பவம் தொடர்பாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இந்தப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிணையில் விடுவிப்பதற்காக கோழி இறைச்சி இலஞ்சமாகக் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய காணொலியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இது குறித்த விசாரணைகளில் தெரியவந்த தகவல்களுக்கமைய சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
![]()