வாழ்கின்ற வகையிலே மரியாதை கிடைக்கும் !…. கவிதை… ஜெயராமசர்மா
மதிப்பு மரியாதை தானாக வரவேணும்
வணங்குதல் வாழ்த்துதல் மனதார வரவேணும்
கேட்டுப் பெறுவதில் பெருமையே இல்லை
கேளாமல் கிடைப்பதே பெருமையே ஆகும்
மண்ணிலே நல்லவண்ணம் வாழ்ந்துமே இருந்தால்
எண்ணில்லா மரியாதை எப்போதும் கிடைக்கும்
கண்ணீரைத் துடைக்காமல் கடமையைச் செய்யாமல்
மண்மீது வாழ்ந்தால் மரியாதை கிடைக்காது
இறையடியார் அனைவரையும் ஏற்றியே போற்றுகிறோம்
இன்தமிழில் குறளீந்த வள்ளுவரை வாழ்த்துகிறோம்
ஏற்றமாம் இலக்கியங்கள் எமக்களித்த அனைவரையும்
என்னாளும் போற்றி இதயத்தால் வாழ்த்துகிறோம்
புத்தரை யேசுவை நபியையும் போற்றுகிறோம்
புனிதராம் காந்தியை போற்றியே நிற்கிறோம்
இத்தரை சிறந்திட வாழ்ந்திட்ட யாவரையும்
ஏற்றியே போற்றுகிறோம் இதயத்தால் வாழ்த்துகிறோம்
வாழ்கின்ற வகையிலே மரியாதை கிடைக்கும்
மரியாதை காத்திட்டால் மதித்துமே நிற்பார்
நடக்கின்ற வகையாலே யாவருமே மதிப்பார்
கிடைக்கின்ற அத்தனையும் சிறப்பாகக் கிடைக்கும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()