பலதும் பத்தும்

பாம்புகள் தொல்லையால் அவதியுற்றுவரும் கனேடிய நகரமொன்று

Garter snakes overrun Manitoba community: ஒரு வகை பாம்புகள் நடமாட்டம், மனித்தோபா நகரமொன்றிற்கு பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது.

மனித்தோபா மாகாணத்திலுள்ள Eriksdale என்னும் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஆம், அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் சகஜம்தான் என்றாலும், கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் பாம்புகளாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள் அந்நகர மக்கள்.

பாம்புகள் தொல்லையால் அவதியுற்றுவரும் கனேடிய நகரமொன்று | Garter Snakes Overrun In Eriksdale

Garter snakes என்னும் ஒரு வகை பாம்புகளின் நடமாட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் Eriksdale Curling Club என்னும் அமைப்பின் தலைவரான லாரி வெதர்பர்ன் (Larry Weatherburn), எங்கு பார்த்தாலும் பாம்புகளாக காணப்படுவதாக தெரிவிக்கிறார்.

கையில் வாளி ஒன்றை எடுத்துக் கொண்டு பாம்புகளைப் பிடித்துவரும் லாரி, ஒரே நாளில் 30 பாம்புகள் சிக்கியுள்ளதாகவும், சில நேரங்களில், அவை கடிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பாம்புகள் தொல்லையால் அவதியுற்றுவரும் கனேடிய நகரமொன்று | Garter Snakes Overrun In Eriksdale

பிரச்சினை என்னவென்றால், இந்நகர மக்களால் அந்தப் பாம்புகளைக் கொல்லவும் முடியாது. காரணம், அவை வன உயிர்கள் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள்!

இந்த பிரச்சினை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கலாம் என்கிறார் லாரி. அதாவது, வெப்பம் குறைந்தால்தான் இந்த பாம்புகள் பிரச்சினை தீருமாம்.

இதற்கிடையில், வீடுகளின் அஸ்திபாரங்களில் காணப்படும் பிளவுகளை அடைப்பது, புல்லை குட்டையாக வெட்டுவது, குப்பை கூளங்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்கள் வீடுகளின் அருகே பாம்புகள் பதுங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள் மக்கள்.

இந்த Garter snakes வகை பாம்புகள், ஒரே நேரத்தில் 10 முதல் 50 குட்டிகளை ஈனும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *