நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஜெனீவாவில் இலங்கையை அரசு சிக்கவைக்கக் கூடாது; சர்வதேசத்திடம் உறுதியளிக்க முன் சிந்திக்க வேண்டும் என்கிறார்

நல்லிணக்க பொறிமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசத்திற்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் மீறப்படுமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது இந்த அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ அல்ல, இந்நாட்டு மக்களே ஆகும். இதனால் அரசாங்கம் சர்வதேசத்திடம் வாக்குறுதியளிப்பதற்கு முன்னர் இது நடைமுறைச் சாத்தியமானதா? இதனைச் செய்ய முடியுமா? என்று சிந்தித்து வாக்குறுதியளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான பேராசிரி யர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி யினால் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரி விக்கையில்,
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை யின் 63வது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. மனித உரிமைகள் உயர்ஸ்தா னிகர் இலங்கை தொடர்பான விரிவான அறிக் கை யொன்றை அந்த அமர்வில் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் இலங்கைக்கு எதிராக மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமந்தப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை அரசாங்கத்தின் பதில ளிப்பு என்னவெனில், அதிகமாக அழுத் ம் கொடுக்க வேண்டாம் என்பதாகும். அப்படி யென்றால் இந்த நிலைமைக்கு யார் பொறுப்பேற்பது? தவறு எங்கே இருக்கின்றது?
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீ க்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய ட்ட மூலமொன்றை முன்வைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது. இந்தச் சட் டத்தை நியாயப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் மிகவும் தெளிவாக ஏற்றுக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாக்கவே முடியாது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 47 ஆண் டுகளுக் டுகளுக்கு முன்னர் 1979 ஆம் ஆண்டுசட்ட மாக்கப்பட்டது. அது கடுமையான விமர் சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இதனை மேலும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது அல்ல என்பதை ஏற்றுக் கொண்ட அரசாங்கம், இதனை மாற்றுவ தாக வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை சர்வதேசம் காத்திருக்கின்றது.
2025 டிசம்பர் மாதத்தில் நீதியமைச்சர் புதிய சட்டமூலமொன்றை முன்வைத் நார். அது 1979 ஆம் ஆண்டின் சட்டத்தை விடவும் ஆபத்தானது என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது எனக் கூறப்பட்டது. அதற்கு அரசாங்கத்தின் பதில் என்னவாக இருந்தது? நாங்கள் சமர்ப்பித்துள்ள இந்த புதிய சட்டமூலம் பொருத்தமானது அல்ல எனக் கூறி இதற்குப் பதிலாக நாங்கள் வேறொரு சட்டமூலத்தைக் கொண்டு வருகிறோம் என்றும் அரசாங்கம் கூறியது. அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சரவை புதிய சட்டமூலமொன் றிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அர சாங்கம் அறிவித்தது. ஆனால் இன்று வரை இந்த நாட்டில் எந்த வொரு நபருக்கும் அந்தச் சட்டம் என்னவென்றோ, அதன் உள்ளடக்கம் என்னவென்றோ, அல்லது அதன் சரத்துக்கள் என்னவென்றோ தெரி யாது. எந்தவொரு கலந்துரையாடலோ நடைபெறவில்லை.
இச்சட்டம் குறித்து ஆர்வம் காட்டும் எமது நாட்டின் சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள், பல்சு லைக்கழகங்கள் என யாருடனும் கலந்து ரையாடப்படவில்லை. 2025 டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டம் முற்றிலும் தோல்வியடைந்தது. அது ஏன் நடந்தது? எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், யாருடனும் கலந்தாலோசி க்காமல், சமூகத்தில் நிலவிய கருத்துக்க ளைக் கருத்தில் கொள்ளாமல், இரகசிய மாக அச்சட்டத்தை உருவாக்க முயன்ற மையினாலேயே அது தோல்வியடைந்தது. அதே கதிதான் இந்த புதிய சட்டமூலத் திற்கும் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு சுள் உள்ளன.
அப்படியானால் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, சர்வ தேச தரத்திற்கு இசைவான, நவீன சமூகத் திற்குப் பொருத்தமான புதிய சட்டமூ லத்தை அரசாங்கம் முன்வைக்கும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை காத்திருக்கின்றது. ஆனால் அது செய்யப்படவில்லை.
இதன் காரணமாகவே ஜெனிவா நகரில் இப்போது நடைபெற்று வரும் அமர் வில் இலங்கைக்கு எதிராக இத்தகைய கடுமையான விமர்சனங்கள் முன்வைக் கப்படுகின்றன. இந்தச் சட்டம் ஜனநாய
சுத்திற்கு முரணானது என அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் நிலையிலும், 2025ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் 46 தடுத்து வைப்புகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, அரசாங்கமே விமர்சிக்கும் இச்சட்டத்தின் கீழ் 12 தடுத்து வைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? சட்டம் தவறானது. இதனை நீ க்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வருவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் செய்வதில்லை; வாக்குறுதியை மீறுகின்றது. மோசமானது எனக் கூறிய சட்டத்தையே தொடர்ந்து நடைமுறைப் படுத்துகின்றது. எனவே தான் உயர்ஸ்தா னிகர், இந்தச் சட்டத்தை நீக்குங்கள். புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வரை இதனை நடைமுறைப்படுத்த வேண்டாம். இச்சட் டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என மிகவும் தெளி வாகக் கூறுகிறார்.
இதேவேளை யுத்தகால விசாரணைகள் மிகவும் மந்தகதியில் உள்ளன என உயர்ஸ் தானிகர் சொல்கிறார். அவர், செம்மணி மனிதப் புதைகுழிகளைப் பார்வையிட் டு, எமது நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரை யாடி சென்ற பிறகு இலங்கையிடமிருந்து அவருக்கு ஆதரவு கிடைப்பதில்லை. அதன் பின்னரே அவர் இந்த அறிக்கையை விடுக்கிறார். அதாவது எமது நாடு மனித உரிமைகளை வெளிப்படையாக மீறுகின் றது என அவர் மிகவும் கடுமையான விமர் சனங்களை முன்வைக்கிறார்.
இவ்வாறா ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வது? இன்று ஒன்றைச் செய்வது, நாளை இன் னொன்றைச் செய்வது. எந்தவொரு நிலை யான தன்மையும் இல்லை.
இந்நிலையில் உயர்ஸ்தானிகரின் பதவிக் காலத்தை நீடிக்கும் பிரேரணை வந்தபோது இலங்கை ஏன் ஆதரவளிக்கவில்லை? வெளிவிவகார அமைச்சர் முடிவெடுத்தா ரா? ஏதேனும் தவறினால், தகவல்தொ டர்பு சரியாக நடைபெறாத காரணத்தினால் இலங்கை அவருக்கு ஆதரவளிக்கவில் லையா என்ற கேள்வி தொடர்பாக சந் தேசும் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் அதற்குரிய காரணம் என்ன? ஆதரவளிக்க வில்லை என்றால் ஏன் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது? அழைப்பு விடுக்கப்பட் டதென்றால் ஏன் செம்மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்? அவ்வாறு அழைத்துச் சென்றுவிட்டு பின்னர் ஏன் இத்தகைய முடிவை எடுத்தார்கள்?
இவை பாரதூரமான கேள்விகள். இப் படிச் செல்லும் போது பாதிக்கப்படுவது இந்த அரசாங்கமோ அல்லது அமைச்சர் களோ அல்ல, இந்நாட்டு மக்களே ஆவர். வாக்குறுதிகள் தொடர்ந்து மீறப்படுமா னால், இதற்கெல்லாம் யார் காரணம்? அதி கமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என் கிறார்கள். இந்த அழுத்தங்கள் நியாயமான அழுத்தங்கள் அல்லவா?
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு குறித்து இந்த அரசாங்கம் எவ்வளவு பேசியது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதேனும் ஒரு அமைச்சர் வடக்கிற்கு. யாழ்ப்பாணத்திற்குச் செல்கிறார். பாஜனா திபதியும் பலமுறை யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற ஒவ்வொரு முறையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் பற்றிப் பேசுகிறார்கள். மீண்டும் மீண்டும் இந்த வாக்குறுதி அளிக் சுப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ன செய்யப்பட்டுள்ளது? அத்தகையதொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதா? ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற் கான அடிப்படை அடித்தளத்தைக் கூட அமைப்பதற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எதுவுமே செய்யப்ப டவில்லை.
இப்படிச் செய்ய முடியாது. நாங்கள் கூறு வது என்னவென்றால், யோசிக்காமல் வாக் குறுதிகளைக் கொடுக்காதீர்கள். இவை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள், சில்லறை விஷயங்கள் அல்ல. வாக்குறுதி யளிப்பதற்கு முன்னர் யோசியுங்கள். இது நடைமுறைச் சாத்தியமானதா? இதனைச் செய்ய முடியுமா? அவ்வாறு சிந்தித்துப் பார்த்து இலங்கை அரசாங்கத்தின் வெளி விவகாரக் கொள்கை தொடர்பில் வாக்கு றுதியளிக்க வேண்டும்.
நடைமுறைப்படுத்த முடியாவிட்ட வாக்குறுதியளிக்காதீர்கள். வாக்குறுதிய ளித்த பின்னர் அதனை நடைமுறைப்படுத் துங்கள். வாக்குறுதியளித்துவிட்டு அதனை மறந்துவிட முடியாது. இவ்வாறாக எந்த வொரு பொறுப்பும், புரிதலும், அறிவும், அனுபவமும் இன்றி இந்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதனாலேயே இத் தகைய துயரங்களை இலங்கை மக்கள் இன்று அனுபவிக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
இவை அனைத்தினதும் முடிவு என்ன? மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக் கையிலுள்ள ஏனைய விடயங்களையும் சற்றுப் பாருங்கள். அது இலங்கைக்கு எவ் வளவு ஆபத்தான விளைவுகள் ஏற்படும் எனச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக அதில் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற் றும் கிழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக் களம் மற்றும் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் தலையீ டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.
அப்பகுதியில் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், பொய்க் குற்றச்ச ரட்டுகள் சுமத்தப்படுவதாகவும், வீடுக ளுக்குச் சென்று துன்புறுத்துவதாகவும் அவ்வாறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பெண்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமற் போனோர் பற் றிய அலுவலகம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அந்த அலுவல கத்திற்குச் சுயாதீனமான அதிகாரத்தை வழங்க வேண்டுமாம். விசாரணைகளை மேற்கொள்வதற்கான வசதிகளைச் செய்து தர வேண்டுமாம். அதன் பொறுப்புகளை நம்பகத்தன்மையுடன் நிறைவேற்றுவதற் கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாம். அப்படியென்றால் அவை எதுவுமே இல்லை என்பதுதானே இதன் பொருள் என்றார்.
![]()