உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன் ரிஷாத்தின் அரசியல் பாதுகாப்பில் பலமுறை இந்தியாவுக்குப் பயணம் செய்த சஹ்ரான்; தாக்குதல் நடக்க இடமளித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன், அப்போதைய அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பின் கீழ், சஹ்ரான் ஹாஷிம் மன்னார் கடல் மார்க்கமாகப் பலமுறை இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜென ரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கி ழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவா தத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது குறித்த முன்அறிவித்தல் இருந்தபோதிலும், இரா ணுவப் புலனாய்வுப் பிரிவு அனைத்து தகவல்களையும் சதித் திட்டத்தின் அடிப்ப டையில் மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு இடமளித்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் மேலதிக சொலிசி ட்டர் ஜெனரல் இங்கு தெரிவித்தார்.
278பேரைக் கொன்று, 500-க்கும் மேற்பட் டோரை ஊனமாக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில், சுரேஷ் சலே மற்றும் அவருடன் இருந்த குழுவினருக்கு இடையேயான தொடர்புகள் குறித்து மேலும் இரண்டு ஆதாரங்கள் செவ்வாய்க்
கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டன.
அந்த ஆதாரங்களில் ஒன்று. அப்போ தைய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல் அளிப்பவர் ஒருவரால் வழங்கப் பட்டது.
சஹ்ரானைப் பாதுகாத்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை மறைக்க இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஒரு குழு செயற் பட்டுள்ளதாகவும், அதனாலேயே வவுண தீவு பொலிஸார் கொலை தொடர்பான விசாரணை திசைதிருப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாம் படைப்பி ரிவுக்குத் தகவல் வழங்கிய நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, 2014 முதல் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை தீவிரவாதிகள் பற்றிய துல் லியமான தகவல்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தும், புலனாய்வுப் பிரிவு அதனை ஏனைய பாதுகாப்புத் தரப்பிற்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது.
தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர் களுக்கு ரிஷாத் பதியுதீன் அரசியல் பாது காப்பு அளித்துள்ளதுடன், மன்னார் தொழி
லதிபர் அலாவுதீன் என்பவர் தனது ஸ்பிட் போட் மூலம் சஹ்ரான் உள்ளிட்டோரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
சாய்ந்தமருது பகுதியில் 16 பேர் உயிரி முந்த சம்பவத்தில், உண்மைத் தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்காக இரா ணுவத்தின் ஒரு குழு திட்டமிட்டு அவர் களைப் படுகொலை செய்ததா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
மேலும், 3 ஆம் சந்தேக நபரான சுரேஷ் சலே ஜூன் 07 முதல் 100 நாட்களாக மருத் துவ விடுப்பில் கொழும்பு தேசிய மருத்து வமனையில்இருப்பதாகவும், விசாரணை களை முடக்குவதற்கும் தனது எஜமானர்க ளைப் பாதுகாப்பதற்குமே அவர் இவ்வாறு செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இரண்டாம் நாள் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் உத்தர விடப்பட்டார்.
இருப்பினும், மருத்துவமனை பணிப் பாளர் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிக்கவில்லை. மேலும், சுரேஷ் சல்லே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்து விசா ரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவையும் நீ திமன்றம் நியமித்திருந்தது.
அறிக்கையைத் தயாரிக்கத் தேவையான நோயறிதல் உட்பட அறிக்கைகளை மருத்து வமனை பணிப்பாளர் இந்த மருத்துவக் குழுவிற்கு அனுப்பவில்லை என்பது நீ திமன்றத்தில் தெரியவந்தது.
ஈஸ்டர் விசாரணை தொடர்பாக தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் உள்ள சந்தேக நபரான சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் 100 நாட்கள் தங்கி யிருப்பார் என்றும், இது விசாரணையை முற்றிலுமாக சீர்குலைக்கும் என்றும் மேல திக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சலே தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவை ஒரு ஓய்வு விடுதியாக? பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அவரது சுகாதார நிலை குறித்து விரி வான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப் பிக்க உத்தரவிடுமாறு கோரினார்.
அரசுப் பணியில் தீவிரவாதச் செயல்பா டுகளை விசாரித்த பிரிவில் அங்கம் வகித்த முன்னாள் பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சன் செனரத் பண்டாரா மீது வெளி நாட்டுப் பயணத் தடை விதிக்கவும் மேலதிக செ லிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர் பாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிற பாராளுமன்ற உறுப்பினர்கள் அளித்த வாக் குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
இந்த நிலையில் சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவித் திர பெர்னாண்டோ, பி7 அறிக்கைகளில் உள்ள குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள் அல்ல எனக் குறிப்பிட்டதுடன், நீதிமன்ற நடைமுறைகளின்படி மருத்துவ அறிக் கைகளை மாத்திரம் கோருமாறு கேட் டுக்கொண்டார்.விசாரணை முன்னேறி வருவதாகக் கூறி சமர்ப்பிக்கப்பட்ட ‘பி’ அறிக்கைகள் பொய்யானவை என்றும் கூறினார்.
இதனையடுத்து, தேசிய வைத்தியசாலை யின் பணிப்பாளருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதவான், வழக் கினை செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
![]()