செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை உள்ள மனிதப் புதைகுழி விசாரணைகளை ஐ.நா.உடன் ஏற்க வேண்டும்; நல்லூர் கிட்டு பூங்காவில் திரண்ட தமிழினம் பிரகடனம்

குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங் களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத் துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணை கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணத்தின் கிட்டு பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரக டனம் வெளியிடப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப் புக்களும் பொது மக்களும் நல்லூர் கிட்டு பூங்காவில் பேரணியாக சென்று ஒன்று கூடி நேற்று ஓரணியில் திரண்டு வெளியிட்ட பிரகடனத்தில் இவ்வி டயம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த பிரகடனத்தில், செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படு கொலைக்கான சான்றுப் பொருட்களான வெளிவந்துள்ள நிலை யில் சர்வதேச நீதிகோரி ஒற்றுமையாக நாம் ஒன்றுபட்டு இங்கு கூடி கீழ்வரும் பிரகடனங்களை வெளியிடுகின்றோம்.
செம்மணி உள்ளிட்ட மனிதப்புதைகு ழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும்: செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொ லைக்கான சாட்சியங்களாக வெளிவந் துள்ளன. இந்த சான்றுப் பொருட்களா னவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப் பாட்டில் இருப்பதானது, அவற்றை
சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.
எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சி த்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக் குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதை குழிகளதும் அகழ் வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நட வடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ் தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத் தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பா டுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்ப டைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெ டுக்கப்படல் வேண்டும்.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொ லைக்கு உள்ளக விசாரணைப் பொறி முறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும். தமிழ் மக் கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக் கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர் பாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச குற்றவியில் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டல் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்காக நீதி கோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம் முற்றாக நிராக ரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசார ணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தண்டனை அனுப வித்துவரும் அரசியல் கைதிகள் அனை வரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கர வாத தடுப்புச் சட்டம் உடனடியாக நீ க்கப்படவும் வேண்டும். அத்துடன்சர்வ தேச நியமங்களுக்கு அமைவானது என் னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இராணுவமய மாக்கல் அகற்றப்படல் வேண்டும்.
அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத் தில் தமிழர்களின் தொன்மையான வரலாறு. கலை. பண்பாடு மற்றும் மரபு ரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார திணைக்களம், வனவள, வனஜீ வராசிகள் திணைக்களம் உள்ளிட்டஅரச திணைக்களின் ஊடாக மேற்கொள்ளப் பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட் டுவரும் கட்டமைப்புசார் இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும் நிறுத்தப் படவும் வேண்டும்.
தமிழினப் படுகொலை மீள நிகழா மல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும் கட்டமைப்புசார் இனவ ழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வும், நிலையான இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் -சிறீலங்காவின் ஒற் றையாட்சி அரசியல் யாப்பு முற்றாக நீ க்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவ தனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் – என்றுள்ளது.
![]()