இலங்கை

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு – சஜித் அழைப்பு

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வரு் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒரு கட்சி ஆட்சியை நிறுவ ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சிதைக்க அனுமதிக்கப்படாது என்று வலியுறுத்திய அவர், அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து முற்போக்கு சக்திகளிடமும் பொதுமக்களிடமும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *