இலங்கை

எந்த விசாரணையையும் சந்திப்பதற்குத் தயார்; கைதாக முன்னர் நாமல்

நாங்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள். எங்களுக்கு தவறுகளை செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. இதனால் எந்த நேரத்திலும் சுயாதீன விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

விசாரணையொன்றுக்காக வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்றிருந்த போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்.

நாமல் ராஜபக்‌ஷ 12ஆம் திகதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெருந்திரளான மக்கள் 12ஆம் திகதி கூட்டத்திற்கு வருவார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்கள் பயந்துள்ளனர். எங்களைப் பற்றி இந்தச் சாட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த 159 பேரைக் கொண்டுதான் அனைத்துச் சாட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். சாட்சிகளை உருவாக்கியவருக்கு தான் உருவாக்கிய சாட்சி என்னவென்று. அதனால் அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

நாங்கள் தவறு செய்யவும் இல்லை. எங்களுக்கு எந்தத் தவறும் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. அதனால் எந்த நேரத்திலும் சுயாதீன விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்நாட்டின் நீதித்துறை நேர்மையானது என்றும், அந்த நேர்மையைப் பாதுகாக்கும் நீதிபதிகளும் சட்டக் கட்டமைப்பும் இருக்கின்றனர் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

எவ்வாறாயினும் எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தீர்மானிக்க முடியாது. இந்நாட்டின் மக்கள்தான் அதனை தீர்மானிப்பர்.இதனால் எனது அரசியல் பயணம் மக்களுடனே தொடரும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *