கவிதைகள்

விதிசெய்த பாண்டம்… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அன்றவள் என் கண்ணிலே விழுந்த காலை
என்னுரு அவள் விழித்திரை புகுந்த வேளை
இருவரது மனதுள்ளும் வந்ததந்த ஓர் ஈர்ப்பு
வந்திட்ட அந்த ஈர்ப்புணவே காதல் என்றால்
சொல்வோமே எமக்கும் வந்தது காதலென்று

சந்திரனைக் கண்டு மலரும் அல்லி மலராக
ஆதவனைக் கண்டு மலரும் தாமரை மலராக
நான் சந்திரனானால் அவளும் அல்லியானாள்
அவள் தாமரையானாள் நான் ஆதவனானேன்

அவதாரம் எடுத்ததால் அவரும் கடவுளென்றால்
இருவரும் கடவுள் காதலராய் அவதரித்ததாலே
குயவன் கையிருக்கும் குழைந்த களிமண்போல
என்கையில் அவளிருந்தால் பதமாய் குழைந்தே

குயவன் கைமண்ணோ சிறந்த மற்பாண்டமாகும்
என்கையிலவள் கைவினை பொருளாகவில்லை
வேறோரு நாள் வருமென விரும்பி நானிருந்தேன்
அந்நாள் வரவில்லை அவளையும் காணவில்லை
விதியதை மாற்றி வேறொருவர் பாண்டமாக்கிற்று

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *