பலதும் பத்தும்

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

முன்பெல்லாம் நமது முன்னோர்கள் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை சாப்பிட்டார்கள் அதனால் அவர்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும், சக்தியும் கிடைத்தது. பல வருடங்கள் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது பெரும்பானோர் அரிசி, கோதுமையை தவிர மற்ற தானியங்களை சாப்பிடுவதில்லை. இதனால் மக்களின் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது. அந்த வகையில் சிறு தானியங்களின் நன்மைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்..

கம்பு: உடல் சூட்டை குறைக்கும். உடலுக்கு சக்தி தரும். கம்பு மாவாக அரைத்து வைத்துக் கொண்டு அதில் கூழ், அடை, தோசை, கொழுக்கட்டை போன்றவை செய்யலாம்.

கேழ்வரகு: கால்சியம் மற்றும் இரும்பு சத்து மிகுந்தது. கேழ்வரகு மாவிலும் தோசை, அடை, சப்பாத்தி, இடியாப்பம், பொட்டு கொழுக்கட்டை போன்ற உணவுகளை செய்து சாப்பிடலாம்..

திணை: சர்க்கரை, வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு மிகவும் சிறந்தது, தினையை அரிசி போலவே வேகவைத்து காய்கறிகள் சேர்த்து சாதமாக மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

சாமை: செரிமானம் ரத்தசோகை எலும்புகளுக்கு பலம் மற்றும் சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம். காய்கறி சேர்த்து உப்புமா, பொங்கல் மற்றும் அடை தோசை செய்து சாப்பிடலாம்.

வரகு: உடல் எடை கட்டுப்பாடு வேண்டும் என்பவர் மற்றும் குடல் புண் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வரகு அரிசியில் பொங்கல், அடை, தோசை, இட்லி என அனைத்தும் செய்யலாம்.

குதிரைவாலி: எடை கட்டுப்பாடு மற்றும் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் குதிரைவாலியை சாப்பிடுவது நல்லது. காய்கறி சேர்த்து சாதமாக இட்லி, தோசை, அடை என எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.

வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை சிறு தானியங்களை சேர்க்க வேண்டும்.. உடலில் உள்ள பாதி நோய்கள் சரியாகும்..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button