பலதும் பத்தும்

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!..; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த துவங்கிவிட்டனர். 2 வயது குழந்தை கூட ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது. குழந்தையை கூட சாப்பிட வைப்பதற்கு அந்த குழந்தையின் கையில் பெற்றோர்கள் செல்போனை கொடுத்து விடுகிறார்கள்.

சிறுவயதிலேயே பல குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாக மாறிவருகிறார்கள். அதேபோல் சிறுவர்களும், சிறுமிகளும் தங்களுக்கு செல்போன் வேண்டுமென தங்களை பெற்றோர்களிடம் அடம்பிடிக்கும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. இது அவர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் கல்வி அறிவை மிகவும் கடுமையாக பாதித்து வருகிறது..

குறிப்பாக குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாக மாறி வருகிறார்கள். இந்நிலையில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மிக இளம் வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறையும், கல்வித்திறன் பாதிக்கப்படும், அதிக திரை நேரம் கற்றல் திறனை பாதிக்கும், மொழித் திறனையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button