கவிதைகள்
நானே சூரியன்…. கவிதை… முல்லைஅமுதன்

இன்றும் சண்டை ஒயவில்லை.
நானே சூரியன்
நானே சந்திரன்.
நிலவு மத்தியஸ்தம் செய்தது.
நிலவு பற்றிய விமர்சனம்
அதிகமிருந்தன நம்மிடம்..
காற்றும்
வாளெடுத்துக்கொடுத்தது நிலவிடம்.
நான் பேசிப்பார்க்கிறேனே என்றது
தூங்கிக்கொண்டிருந்த மரம்.
இல்லை..இல்லை..
சுவரிலிருந்து நிமிர்ந்து பார்த்தது
நம் வீட்டு மல்லிகை
சூரியனுடன்
சந்திரனும் எரிந்துகொண்டிந்தன.
நிலவும்,காற்றும்,
மரமும்,மல்லிகையும்
தமக்குள் சிரித்தபடி
ஒப்பந்தம் போட்டன.
ஒரு கவிதைக்காக
சன்னல்களை திறந்தேன்.
அருகில்
தேநீருடன் காத்து நின்றாள் மனைவி.
![]()