பலதும் பத்தும்

மாயமாக மறைந்த மகிந்தவுக்கு எதிரான 450 கோப்புகள்!

கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மறந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருந்தொகை இலஞ்சப் பணம் பெற்றதாகவும், அதனுடன் தொடர்புடைய காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் மகிந்தவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து கடந்த தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்வைத்து வந்தது.

எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் தற்போது அந்தப் போலி பிரசாரங்களையெல்லாம் இந்த அரசாங்கம் மறந்து விட்டது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை கசிப்பு குடிப்பவர்கள் என் கூறி அவமானப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button