உலகம்

சுவீடன் வாள்வெட்டுச் சம்பவம் – 18 வயதுடைய இளைஞர் கைது

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரி பிறரின் தூண்டுதல் இன்றி தனியாக செயற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகள் பாதுகாப்பு கெமராக்களை தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, இந்த வன்முறைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய காவல்துறை பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button