இலங்கை

எந்தத் தவறும் செய்யாத நாமல் நிதிக் குற்றப் பிரிவில்!; அரசாங்கத்திற்கு பொறாமையாம்

நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம், அவரை நிதிக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிவிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்சவை தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு அழைப்பது அரசாங்கத்தின் ஒரு தோல்வியுற்ற முயற்சி. நாமல் ராஜபக்சவின் வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையே இது.

இந்த சதி நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் எதிர்காலத்தில் தெரியவரும்.

மேலும், நானும் எனது குழுவினரும் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போதெல்லாம் நாங்கள் வருகின்றோம். நாங்கள், எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே விசாரணைகளை அச்சமின்றி எதிர்கொள்கின்றோம். இது ஒன்றும் எமக்கு புதிதல்ல.

நாமல் ராஜபக்சவுக்காக இப்போது மக்கள் பெருமளவில் அணி திரள்கின்றனர். எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அரசாங்கத் தரப்பால் இது போன்ற சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button