இந்த அரசிலிருந்து சிறை செல்லப் போவது யார்?; அந்தப் பட்டியல் தன்வசம் என்கிறார் சாமர சம்பத்

“இந்த அரசாங்கத்தின் சிறைப்பட்டியல் என் கைகளில் உள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ பொய் அறிக்கைகளை வெளியிடுவதில் பழக்கப்பட்டவர். மக்கள் இனி அவருடைய அறிக்கைகளை ஏற்க மாட்டார்கள்.
ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக, மக்கள் எதிர்பார்க்காத தேவையற்ற காரியங்களை அரசாங்கம் செய்ய முயல்கிறது. கடந்த காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அரசாங்கங்கள் இறுதியில் தோல்வியையே சந்தித்தன.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சில அரசியல் கட்சிகள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையையோ அல்லது பிரதமர் அலுவலகத்தையோ ஒழிப்பதற்குக்கூட முயற்சி செய்யலாம்.
மேலும், சில குழுக்கள் இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தப் பாராளுமன்றத்தை நீடிக்க முயற்சிப்பதுடன், மற்றவர்களைப் பணியாற்ற அனுமதிக்காத வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அரசிலிருந்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களின் பட்டியல் தன்னிடம் இருப்பதாக வலியுறுத்திய அவர், இந்த அரசாங்கத்தின் சிறைப்பட்டியல் தனது கைகளில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
![]()