நடுகைக்காரி 89… ஏலையா க.முருகதாசன்


துணிக் கடையில் துணிகள் மலிவென்று அறிஞ்சால் காகங்கள் மாதிரி குளிக்காமல் வந்திடுவினம் என்று,பார்வதியைச் சுட்டிக்காட்டித்தான் சொன்னது என்பது சங்கத் துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களில் பார்வதியை தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
ஓவ்வொரு ஊருக்குள்ளும் வாழும் மனிதர்கள் தமது உறினர்களல்லாதவர்கள் யார் என்பதை மிகத் தெளிவாகவே அறிஞ்சு வைச்சிருப்பார்கள்-
சந்தை,கடைகள், கோவில் திருவிழாக்கள் எனப் பொது இடங்களில் காண்போரை ஆரார்; எந்தப் பகுதி ஆட்கள்,எந்தக் குறிச்சியில் எந்த இலகையில் இருப்பவர்கள்,எந்தத் தெருவில், எந்த ஒழுங்கையில் இருப்பவர்கள் என்பதையம் ஆரார் ஆராருக்குச் சொந்தம்,என்ன முறை ஆரார் என்ன வேலை செய்பவர்கள் என்பதையம் அவ்வூர் கிராமசேவகரைவிட,தபால்காரரைவிட அச்சொட்டாக தெரிஞ்சு வைச்சிருப்பவர்களாக அந்தந்த ஊரில் நிறையப்பேர் இருப்பார்கள்.கிராம சேவகர்கள் இப்படியான ஆட்களிடந்தான் கேட்டு அறிஞ்சு கொள்வதுமுண்டு.
தேத்தண்ணிக் கடைகளில் தே;தண்ணி குடிக்க வரும் இளந்தாரி ஒருவன் தேத்தண்ணி குடிக்க வந்தால்,அவன் போனதன்பின்பு வாங்கிலை கொஞ்சம் தள்ளி இருந்து கொண்டு,இப்ப பிளேன்ரீ குடிச்சி;ட்டுப் போறாரே உவர் நல்லதம்பியின்ரை கடைசிக் குமரோடை லவ்வாம் என்று அதையே சுத்திச் சுத்திக் கதைக்கிறதிலை ஊரிலை சிலருக்கு புழுகம் கலந்த மகிழ்ச்சி.
சங்கத்துத் துணிக் கடைக்கு துவணிவாங்க வந்த பார்வதிமேல ஒருசிலரின் கண்பட்டு கண்ணாலேயே அவர்கள் கதை சொன்னதும்,அதில் சிலருக்கு சிலம்பரசி பார்வதியை குத்திக்காட்டிப் பேசியதில் ஒருவித மகிழ்ச்சி.
சங்கக் கடையில் பார்வதிக்கு நேர்ந்த அவமானத்தை ஒரு சிலர் விரும்பிவில்லை,ஆனால் தமக்கேன் வீண் பிரச்சினை என்று நினைச்சு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் பேசாமல் இருந்துவிட்டனர்.
சிலம்பரசி சாப்பிட்டு முடிச்சதும்,அண்ணி வாங்கோ என்று மங்களேஸ்வரி தனது அறைக்குக் கூட்டிக் கொண்டு போகிறாள்.

மருமோளைக் கூட்டிக் கொண்டு மகள் போவதைக் கண்டதும் மங்களம் கொண்ணற்றை அறையை ஒருக்கா கூட்டித் துப்பரவாக்கி கட்டில் பெட்சீட்டையும் ஒழுங்காக்கிவிடு என்று தனபாக்கியம் மங்களேஸ்வரியிடம் சொல்ல சரியம்மா என்று பதில் சொல்லிக் கொண்டே அவள் அறைக்கள் போகிறாள் அவளோடு கூடவே போன சிலம்பரசியும் கட்டிலை ஒழுங்குபடுத்தித் துப்பரவாக்க, அண்ணி நீங்கள் ஒரு இடத்திலை இருங்கள் நான் செய்யிறன் இது என்ன பெரிய வேலையோ என்று மங்களேஸ்வரி சொல்கிறாள்.
ஆனால் சிலம்பரசி தானும் செய்யிறன் என்று கட்டில் மெத்தையை கையாலஆ; தட்டிவிட்டு ஒழுங்கற்று கிடந்த பெட்சீட்டை தலைகணிக்கு மேலே அழகாக மடிசு;சு வைக்கிறாள்.
சிலம்பரசியை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்ததை சிதம்பரப்பிள்ளை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையென்றாலும்,எல்லாரும் சேர்ந்து சாப்பி;ட்டதன் பின்புகூட,சிலம்பரசியின் முகம் வாடியிருப்பதைக் கண்டும் அதுபற்றிக் கேட்காமல் எப்படியும் தனது மனுசி சொல்லுவாள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் விறாந்தைக்கு வந்து புற்பாயை விரித்து,தலைக்கு கையை முட்டுக்குடுத்தபடி மனுசி வரும்வரை காத்திருந்தார்.
மத்தியானச் சாப்பாட்டுக்காக முருகதாசன் வழமையாக சிலம்பரசியை சைக்கில் பாரில் ஏத்திக் கொண்டு சிலம்பரசியின் தாய் வீட்டுக்குப் போவதும்,இரவுச் சாப்பாட்டுக்கு தாய் வீட்டுக்கு வந்து அங்கு சில நாட்கள் சாப்பிடுவதும்,அப்படிச் சாப்பிடும் நாட்களில் சிலம்பரசிக்கு தாய் கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டைக் கொண்டு போய் கொடுக்க, கணவனின் தாயிடம் கொஞ்சம் கோபமிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆசையாசையகச் சாப்பிடுவாள்.என்ன சாப்பாடு உருசியாக இருக்குதா என்று கணவன் கேட்டாள் நல்லாயிருக்கு என்று வாயைத் திறந்து சொல்லமாட்டாள்,ஆனால் நல்லாயிருக்கு என்று தலையை மட்டுமாட்டுவாள்.
ஆனால் அன்று மனைவி தாயுடனும் தங்கையுடனும் போவதைக் கண்ட அவன் கெடஇடுதிலும் ஒரு நல்லது நடந்திருக்குது என்று மனதுக்குள் நிம்மதியடைந்தவன்,மத்தியானச் சாப்பாட்டுக்கு தாயின் வீட்டுக்கு வந்திருந்தான.;
வீட்டுக்கு வந்த முருகதாசன் பின்னேர வேலைக்குப் போக வேண்டுமென்பதற்காக அம்மா நான் யூனியனுக்குப் போட்டு பின்னேரம் வாறன் என்று தாய்க்குச் சொல்லிவிட்டுப் போக,அவன் போனதும், தனபாக்கியம் கணவனுக்கு பக்கத்தில் வந்தமர்ந்து மெதுவான குரலில் கணவனுக்கு மட்டுமே கேட்கக்கூடியதாக, சங்கத்தில் சிலம்பரசி பார்வதி என்ற பிள்ளையை குத்திக்காட்டிச் சொன்னதை ,தாங்களும் அதைக் காதாலை கேட்டதையும் சொல்லி;,என்ன இருந்தாலும் சிலம்பரசி எங்கடை மருமோளென்றாலும்கூடஅந்தப் பிள்ளையைப் பார்த்து அப்படிச் சொன்னது பிழை,அது அவளை அவமானப்படுத்திய சொல்தான்,அங்கை நின்ற சிலருக்கு அவள் யாரென்று தெரியும் போல,ஒருத்தருக்கொருத்தர் அந்தப் பிள்ளையை கண்ணாளை காட்டியதையும் கண்டன.
அவமானத்திலை அந்தப் பிள்ளையின்ரை மூக்கும் முகமும் சிவந்து கண்களில் கண்ணீர் முட்டிநின்றதை நான் அவதானித்தன்.சிலம்பரசி மருமோள் என்றாலும் அவளைக் கண்டிக்க முடியவில்லை,ஆனால் மங்களம் அம்மா அண்ணி பிழை விட்டிட்டா அவ அப்படிச் சொன்னது பிழையம்மா நான் கேக்கட்டா என்று அவள் வாயை உன்னப் போக,நான் அவள் கையை இறுக்கி அழுத்த அவளும் பேசாமலிருந்திட்டாள்.கொஞ்ச நேரம் என்ன செய்யிறதெண்டே எங்களுக்குத் தெரியேலை,அந்தப் பிள்ளைக்கு தன்னைத்தான் சிலம்பரசி கேலியாகச் சொன்னது என்று விளங்கிப் போச்சுது.
அந்தப் பிள்ளை சிலம்பரசியைப் பார்த்து மலிவென்றால் காகங்கள் மாதிரி வந்திடுவினம் என்று யாரைச் சொன்னனீங்கள்,உண்மையைச் சொல்லுங்கள் என்னைத்தானே சொன்னனீங்கள் என்று சிலம்பரசியைப் பார்த்துக் கேட்க,அந்தப் பிள்ளை துணிஞ்சு இப்படிக் கேட்குமென்று சிலம்பரசியும் எதிர்பார்க்கவில்லை நாங்கள் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.
சிலம்பரசி நிலைமைச் சமாளிப்பம் என்று நினைச்சாளோ தெரியாது நான் உன்னைச் சொல்லவில்லை என்று,உன்னை என்ற சொல்லை அழுத்திச் சொல்ல,அந்தப் பிள்ளை கோபத்தில் விஸ்வரூபமே எடுத்தாள்.
நீங்கள் என்னை எதற்காக உன்னை என்று சொன்னனீங்கள்,நான் உங்களுடைய நண்பியா?, உங்களுக்கு மற்றவையுடன் மரியாதையுடன் கதைக்கத் தெரியாதா என்று அந்தப் பிள்ளை சொல்லிற்று.
சிலம்பரசி உன்னை என்று சொன்னதில் அவளிடம் திமிர் இருந்ததையும் அவளின் தொனியிலிருந்து புரிஞ்சு கொள்ள முடிஞ்சுது.அந்தப் பிள்ளையை யார் என்று தெரிஞ்சுதான் சிலம்பரசி அப்படிச் சொல்லியிருக்கிறாள் என்று நினைசு;சுக் கொண்டு நின்றம்.
அங்கை நின்ற யாருமே அந்தப் பிள்ளையின் பக்கத்தில் உள்ள நியாயத்தைச் சொல்லவில்லை.எல்லாருக்கும் அந்தப் பிள்ளை யாரென்று தெரியும்போல ஒருத்தருக்கொருத்தர் கண்ணாலும் அருகில் நின்றவர்களிடம் சுரண்டியும் சொன்னதை நானும் மங்களமும் கவனிச்சன்.
அம்மா அண்ணியோடை வாக்குவாதபபட்ட் பிள்ளையைக் காட்டி என்னமோ சொல்லுகினம் என்றாள் மங்களம்.
அதற்குமேல் அந்த இடத்திலை அந்தப் பிள்ளை அங்கை நிற்கவில்லை,வேகமாக சங்க முகாமையாளர் இருந்த மேல்மாடிக்குப் போக தம்பியின்ரை சினேகிதன் ஞானம் நானும் வாறன் இஞ்சை நடந்ததுக்கு நான் சாட்சி சொல்கிறன் என்று கூடவே போனான்.

ஞானம் ஆரெண்டால் பன்னாலை சுப்பையாண்ணையின்ர மகன்,எங்கடை மகன்ரை நண்பன்,மங்களத்தோடை மகாஜனாவிலை ஒன்றாகப் படிக்கிற பொடியன்;, எங்கடை மருமோள் தன்ரை நண்பன்ரை பெண்சாதியென்று தெரிஞ்சும் அந்தப் பிள்ளையின்ரை பக்கம் இருக்கிற நியாயத்திற்காக அந்தப் பிள்ளையோடை அந்தத் தம்பியும் கூடப் போனான்.
அந்தச் சனத்துக்குள்ளை யாரோ ஒருத்தி அந்தப் பிள்ளையோடை போறதைக் கண்டதும் காந்தம் இரும்பை இழுத்துக் கொண்டு போகுது என்று சேட்டையாகச் சிரிச்சுச் சொன்னதை நானும் கேட்டன் என்று தனபாக்கியம் சங்கத்திலை நடந்ததை விலாவாரியாக சிலம்பரசிக்கு கேட்காதவாறு கணவனுக்குச் சொன்னதும்,சரி நடந்த துநடந்து முடிஞ்சுட்டுது மருமோளோடை இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம்,நான் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டு தோட்டப் பக்கம் போகவேணும்,ஏகாம்பரம் தன்ரை மோளின்ரை சாமந்தியச் சடங்குக்கு எங்கடை தோட்டத்திலையிருந்து இரண்டு கதலிக்குலைகள் பார்த்தவர் அதை அடிவாழையோடை வெட்டிக் பழுக்கப் போட வேண்டுமென்றவர்,பின்னேரம் மூன்றரை மணிக்கு தோட்டத்திற்கு வாறன் என்றவர் என்று சொல்ல,சரி நீங்கள் கண்ணயருங்கள் என்று சொல்லிக் கொண்டே தனபாக்கியம் எழுந்து போகிறாள்.
(தொடரும்… )
![]()