அரசியலில் குழி பறிக்கும் தந்திரம் – இளைஞர்களிடம் ரணில் விடுத்த கோரிக்கை

அரசியலில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஜென்ஸி தலைமுறையினருடான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் என்பது ஒரு கடினமான பயணம். சிலர் வீழ்ந்து விடுகிறார்கள். சிலர் விலகி விடுகிறார்கள்.
அரசியல் தந்திரோபாயங்கள்
1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் எங்களுடன் இருந்த சிலர் அரசியலை விட்டு விலகி, வணிக மற்றும் சட்டத் துறைகளுக்குச் சென்றனர்.

அரசியலுக்கு அர்ப்பணிப்பு அவசியம். அர்ப்பணிப்பு இல்லையென்றால், எந்தவொரு அர்த்தசாஸ்திரத்தையும்,அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் தந்திரோபாயங்கைளும் கற்றுப் பயனில்லை.
களத்தில் இறங்கி வேலை செய்பவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம். அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தந்திரம்
அங்கு இளைஞர் ஒருவர், “நீங்கள் பின்பற்றுவது கௌடில்யரையா? சந்திரகுப்தரையா? அல்லது இருவரையுமா?” என கேட்ட கேள்விக்கு, “நான் ரணில் விக்ரமசிங்கவாகவே இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார்.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை படிப்பதும், சந்திரகுப்தர் மற்றும் மாக்கியவெல்லி போன்ற ஆளுமைகளின் தத்துவங்களை கற்றுக்கொள்வதும் அரசியலுக்கு முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()