ராஜபக்சர்களுடைய ஆட்சி காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டது ஒரே குழுவா..!; வெளியாக திடுக்கிடும் தகவல்கள்

லங்கா இ-நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீர, ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களுக்குப் பின்னால் ஒரே குழு செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரகசிய நிதி மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக முன்னிலையாகும் தனியார் வழக்கறிஞர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே மற்றும் கபில ஹெந்தாவிதாரண போன்ற அதிகாரிகள் உள்ளடங்கிய, வழக்கமான நிர்வாகக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு ‘இணை அரசு’ இயங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு, எவ்வித ஆதாரங்களையும் விட்டுச் செல்லாத வகையில் மிகவும் தொழில்முறையாகச் (Professional) செயல்பட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()