பலதும் பத்தும்

காதல் செய்யும் பாம்புகளை தொந்தரவு செய்யும் காகம் – வேடிக்கையான காணொளி

இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நடனமாடுகின்றன. நாகப்பாம்புகளின் காணொளிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. மழைக்காலத்தில் பாம்புகள் தங்கள் துணையுடன் நடனமாடுகின்றன.

அதனால்தான் மழைக்காலத்தில் பாம்புகள் பெரும்பாலும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருகின்றன. இந்த நிலையில் தற்போது பாம்புகள் இரண்டு நடனமாடும் காணொளி வைரலாகி வருகின்றது.

 

 

இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், ஒரு காக்கை அவற்றுக்கு இடையில் வந்தது. அது மிகவும் கோபமாக இருப்பது போல் தோன்றினாலும், காதலித்துக் கொண்டிருந்த அந்தப் பாம்புகளின் வால்களை இழுத்து விசித்திரமாக நடந்து கொண்டது.

அது தனது அலகால் அவற்றின் வால் நுனிகளைப் பலமுறை இழுக்க முயன்றது. இதற்கிடையில், அங்கிருந்த சிலர் காகத்தின் அந்த விசித்திரமான செயலைத் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்தனர்.

நாகங்களும், காகம் தங்களைத் தொந்தரவு செய்ததைச் சற்றும் பொருட்படுத்தாமல், தங்கள் நடனத்தில் மூழ்கின. இதற்கு இணையவாசிகள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button