இலங்கை

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றி நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

தற்போது அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டுள்ள ஒருசில தரப்பினர், சுரேஷ் சலேவின் கைது விவகாரத்தைத் தங்களது சுயநல அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளனர்.

அவர்கள் சலேவுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுக்கும் விசித்திரமான செயற்பாடுகள், சலே மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல் | Political Orphans Are Clamoring For Saleh

நாடாளுமன்றத்தில் நேற்று (26)நடைபெற்ற, ‘நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

“நாட்டின் போதைப்பொருள் அரக்கனை ஒழிப்பதற்காக எமது அரசு மிகவும் கடுமையான மற்றும் தீர்க்கமான உத்திகளைக் கையாண்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா வசித்து வந்த கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லம், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் விசேட உயர் மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சுனில் வட்டகல

அதேபோன்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க வசித்த உத்தியோகபூர்வ இல்லமானது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுச் செயற்பாடுகளுக்காகப் முழுமையாகப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் முக்கிய போதைப்பொருள் மற்றும் ஊழல் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இத்தகைய அரச உத்தியோகபூர்வ இல்லங்களினுள்ளேயே விசேட நீதிமன்றக் கட்டமைப்புகளை அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல் | Political Orphans Are Clamoring For Saleh

அரசு சட்டத்தின் பிரகாரம் தராதரமின்றி உரிய குற்றவாளிகளுக்கு எதிராகத் தார்மீக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அதனைத் தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகின்றார்கள்.

தற்போதைய புதிய அரசு ஒருபோதும் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்காது. கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராகப் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்தின் ஊடாகச் சிறையில் அடைத்துப் பழிவாங்கினார்.

அரசியல் பழிவாங்கல்

 

அதுமட்டுமன்றி, ராஜபக்ச குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப தீர்ப்பளிக்க மறுத்த காரணத்தால், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பதவியிலிருந்து தூக்கினார்கள். இதுதான் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் ஆகும்.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல் | Political Orphans Are Clamoring For Saleh

 

ஆனால் இன்று, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராகக் கிடைத்துள்ள அசைக்க முடியாத சான்றுகளின் அடிப்படையிலேயே அவர் சட்டப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் தன் கடமையைச் செய்யும் போது அதற்குக் குறுக்கே நின்று யாரும் தப்பிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button