உலகம்

ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: தலா 160 பேர் விடுதலை

உக்ரைன் – ரஷ்யா இடையே 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிணைக் கைதிகள் பரிமாற்றம்

வெள்ளிக்கிழமை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலும்  தலா 160 பிணைக் கைதிகள் பரிமாறி கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு பிறகு இரு நாடுகளும் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றத்திற்கு சம்மதித்தனர்.

கடந்த மே மாதம் இதே போன்ற மத்தியஸ்த முயற்சியின் அடிப்படையில் கிட்டத்தட்ட 205 பிணைக் கைதிகளை ரஷ்யாவும், உக்ரைனும் பரிமாறிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: தலா 160 பேர் விடுதலை | 160 Prisoner Swap Between Russia And Ukraine

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் தற்போது பெலாரஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button