உலகம்

குடியேற்ற நீதிமன்றத்திக்கு வருபவர்களை கைது செய்யக்கூடாது; அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வரும் வெளிநாட்டினரை கைது செய்ய கூடாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை காரணம் காட்டி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி அமெரிக்காவின் குடியுரிமை கொள்கைகளில் டிரம்ப் நிர்வாகம் பல மாற்றங்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது.

குடியேற்ற நீதிமன்றத்திக்கு வருபவர்களை கைது செய்யக்கூடாது; அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு | Us Court Orders Immigration Must Not Be Arrested

இதையடுத்து அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர் மீது அமெரிக்கா அரசு நடவடிக்கை எடுக்க துவங்கியது. குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் குடியேறிகள் தீவிரமாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதை எதிர்த்து அங்குள்ள குடியேற்ற ஆதரவு அமைப்புகளும், தொழிலாளர் சங்கங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் டிரம் அரசின் நடவடிக்கை மிகவும் சட்டவிரோதமானது என கண்டித்தது. ஒரு பக்கம் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வரும் வெளிநாட்டினரை டிரம்ப் அரசு தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வந்தது. தற்போது அமெரிக்க நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button