இலங்கை

இறுதி போரை தலைகீழாக மாற்றியிருக்கும் ஒரு சந்தர்ப்பம்: ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெளிப்படுத்திய இரகசியம்

2009 ஆம் அண்டு நடைபெற்ற தெயட்ட கிருள “அரசுக்கு மகுடம்” கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்படவிருந்த சந்தர்ப்பத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்கள்,

குண்டுதாரி வந்த விதம்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில்,பெப்ரவரி பிற்காலத்தில் கைது செய்யப்பட்ட இராணுவத்தில் பணியாற்றிய கேர்னல் தர அதிகாரி அவரின் பெயர் ரஞ்சித் பெரேரா என்று எனக்கு நினைவிருக்கிறது.

அவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணிய ஒரு அதிகாரி.அவர் அளித்த வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்;

2009 இல் அவர் ஒரு குண்டுதாரியுடன் செயற்பட்டதாகவும், மூன்று தடவைகள் அவர் அந்த குண்டுதாரியுடன் தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் மூன்று முறை தெயட்ட கிருல இராணுவ கண்காட்சிக்கு வந்துள்ளதாகவும்,

இறுதி நாளில், அது திறந்து வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரையும் குண்டுவைத்து கொல்லவே அவர் திட்டமிட்டிருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் திறப்பு விழாவுக்கு முதல் நாள் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு பொறுப்பானவராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோனே செயற்பட்டார்.

சோதனையின்றி உள்ளே வருவதற்கு பிரிகேடியர் அல்லது அதற்கு மேற்பட்ட உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரமே அனுமதி என்று.

அந்தத் தீர்மானத்தின் படி குறித்த கேர்னல் தர அதிகாரிக்கு குண்டுதாரியுடன் உள்ளே நுழைய முடியவில்லை.அதனால் எங்கள் அனைவரின் உயிர்களும் காப்பற்றப்பட்டது.அன்று அது நடந்திருந்தால் இறுதி போர் தலைகீழாக மாறியிருந்திருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button