உலகம்

போரின் பின் மீண்டும் பயங்கரம் வெடித்துச்சிதறிய எரிவாயு ஆலை – கட்டாரை உலுக்கிய அதிர்ச்சி!

போரின் காரணமாக மூடப்பட்டிருந்த எரிவாயு ஆலை, மீண்டும் திறக்கப்பட்ட வேளையில் வெடித்துச் சிதறியுள்ளது.

கட்டாரில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக, கட்டாரின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையம் முன்னதாகக் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது போர் முடிவடைந்து பேச்சுவார்த்தை தொடங்கியதைத் தொடர்ந்து, மூடப்பட்டிருந்த எரிவாயு ஆலையை மீண்டும் இயக்க கட்டார் அரசு தீர்மானித்தது.

அதற்கமைய நிறுவன ஊழியர்களும், பொறியாளர்களும் ஆலையின் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே எதிர்பாராதவிதமாக எரிவாயு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் எரிவாயு ஆலை முழுவதும் வெடித்து சிதறி புகைமண்டலமானது.

விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button