இலங்கை

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான வாக்கெடுப்பு..!; தமிழர்களுக்கு சாதகமா – பாதகமா..

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் இதில் வாக்களிக்க வேண்டும் என்று சுவிசர்லாந்திலுள்ள சோசலிச ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சிறி.இராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெளிவாக வாசித்து தெரிந்து வாக்களிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் இந்த பிரேரணையை நிராகரித்துள்ளன.அரசாங்கமே இதனை நிராகரிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது. எனினும் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிடும் கருத்துக்களால் குழப்பாமல் தெளிவாக வாக்களிக்குமாறும் குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்திலுள்ள மற்ற நாட்டவர்களும் இதனை நிராகரிக்கிறார்கள். இந்த பிரேரணை தோல்வியடையும் என்றும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button