உலகம்

குவைத், பஹ்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை. அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வரும் நிலையில், ஈரான் அதை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாரசீக வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள Qeshm தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது, அங்குள்ள ஈரான் ராணுவத் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவின் Centcom தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலடியாக ஈரான், ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன்கள் இலக்கை தாக்க தவறிவிட்டது அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குவைத் நோக்கி இரண்டு ஏவுகணைகள் தாக்குதல் மேற்கொண்ட ஈரான். பஹ்ரைன் மீது 3 ஏவுகணைகளையும் வீசியது. இவற்றை உடனடியாக அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்து அழித்தன.

மேலும், மூன்று டிரான்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதேவேளையில் ஈரானின் அதிகாரப்பூர் செய்தி ஏஜென்சி ஐஆர்என்ஏ, அமெரிக்காவின் இராணுவ அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதை அமெரிக்கா மறுத்துள்ளது. அனைத்து ஈரான் தாக்குதலும் தோல்வியில் முடிவடைந்தன எனத் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button