கட்டுரைகள்

செலவுச் சிக்கனமும் புத்திசாதுரியமும்… சோலையூர் குருபரன்

நமக்கு இருக்கும் பகுத்தறிவு நல்லது கெட்டதை அறிந்து பொருத்தமானதைச் செய்து நிறைவேற்றுவதற்கே என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். சில வேளைகளில் மனிதன் நான்கறிவு கொண்ட பறவைகள், ஐந்தறிவு கொண்ட மிருகங்களையும் விட மிக மோசமாக நடந்து விடுகிறான்.

நம்மைக் குத்தவரும் மூவறிவு (பரிசம், ரசம், கந்தம்) கொண்ட நுளம்பு கூட நமது குருதியின் வகை, வியர்வை, நமது உடல் வெப்பம் என்பவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டு நாம் கையினால் அடித்துத் தாக்க முடியாத இடத்தில் புத்தி சாதுரியமாகக் குத்திச் செல்கிறது. அதேபோல்தான் ஒவ்வொரு உயிரினமும் தமது உணவு, பாதுகாப்பு என்பவற்றுக்காக எவ்வளவோ முயற்சி செய்கின்றன. எறும்பு, தேனி ஆகியவற்றைப் புத்தி சாதுரியத்துக்கும், சுறுசுறுப்புக்கும் உதாரணமாகக் கூறுகின்றோம். நீரில் வாழவன, நிலத்தில் ஊர்ந்து செல்வன, பறவைகள், மிருகங்கள் யாவும் தமது வாழ்க்கை முறை, உணவுச் சங்கிலி என்பவற்றில் இருந்து இம்மியளவும் விடுபடவில்லை. மனிதனிடம் ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும் பல சந்தர்ப்பங்களில் பஞ்சமகா பாவங்கள், வஞ்சகம், சூது, வாது, கள்ளம், கபடம், போட்டி, பொறாமை, அடுத்துக் கெடுத்தல், ஊழல், மோசடி என்பவற்றில் ஈடுபட்டுப் பலர் மற்றவரின் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவரிடம் அளவுக்கதிகமான ஆசையும், கோபமும் இருந்தால் அவர் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ மாட்டார். ஆசை (மண்ணாசை, பெண்ணசை, பொருளாசை, புகழாசை), பதவி, அதிகாரம், பக்கபலம், செல்வாக்கு இருந்தால் அவர் தன்னை மறந்து ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார். அவரின் ஆட்டத்துக்கு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அப்போது எல்லாவற்றையும் இழந்து நிற்றபார்.

பெண்களே... உங்களுக்கு காதல் திருமணமா? செவ்வாய் சொல்லும் சேதி! | Chevvai is  the important role in marriage of a girl - Tamil Oneindia‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாவர்’ என்பதுபோல் எல்லோருக்கும் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு(இறப்பு) நிரந்தரமானது. இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. நல்லபடி வாழ்பவரே வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தை அடைவார். ‘யாவும் கடந்து போகும்’ ‘இதுவும் கடந்து போகும்’ ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதைப் புரிந்து கொண்டு வாழ்க்கையைப் புத்தி சாதுரியமாகச் சீரமைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழலாம். ‘விரலுக்குத் தக்கதுதான் வீக்கம்’ என்பதுபோல் வரவுக்கேற்ப செலவு செய்து சிக்கனமாக வாழப் பழகிக் கொண்டால் மகிழ்ச்சியோடு வாழலாம். இல்லையெனில் வாக்ககை முழுவதும் துன்பமே நிலைத்திருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே. சீர்கெட்டு வாழ்வதற்கல்ல. இந்த வாக்கை நமக்குக் கிடைத்த வரம். சகல வளங்களும் நிறைந்த இந்த உலகில் வாழத் துடிப்பவரும் இலக்கினை அடையத் தீவிர முயற்சி செய்பவரும் வெற்றிக் கம்பத்தை விரைவில் அடைந்து கொள்வார். இறைவனும் இத்தகையவருக்கே வழிகாட்டுவான். சோம்பேறிகளுக்கும், முயற்சி செய்ய மறுப்பவர்களுக்கும் அல்ல. ‘வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்’ என்பதுவும் சந்தோசமும் மகிழ்ச்சியும் அவரவர் எண்ணப்படியும் செயல் மூலமாகவுமே கிடைக்கும் என்பதுவும் உண்மையானவை. நல்லது செய்தால் நல்லது விழையும். ‘வினை விதை்தவன் வினை அறுப்பான் தினை வவிதைத்தவன் தினை அறுப்பான். இதனையே விஞ்ஞானி சேர்.ஐசாக் நியூட்டனின் கூறிய மூன்றாவது விதி நிருபித்து நிற்கின்றது.

இந்நெருக்கடியான சூழ்நிலையில் நிகழ்வுகள், விழாக்கள், உற்சவங்கள், சம்பிரதாயங்கள் என்று மக்களை வருத்துவதை விடுத்து சமூகத்தினதும், சமூகத்தின் நல்வாழ்வு கருதியும் நல்ல கருமங்களைச் சிக்கனமாகச் செய்ய முயற்சிப்பதே சாலப் பொருத்தமானதாகும்.
2023 மே மாதம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காதலர்கள் திருமணத்துக்கான ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அச்செலவுகள் (இருபது இலட்சம்) அனைத்தையும் கொண்டு கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் மிக வறுமையில் குடிசை ஒன்றில் வாழ்ந்த குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்து மிகச் சிக்கனமாகத் திருமணத்தை நடாத்தி முடித்தனர். வீடு கிடைத்த அந்தப் பெண்மனி இறைவன் நேரில் வந்து இந்த உதவியைச் செய்ததாக அந்தத் தம்பதியினரை வணங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்வினைச் சமூக வலைத்தளங்களில் பார்வையிட்ட சகலரும் வாழ்த்தினர். இந்தவேலை தரும் சேவை வாழ்த்தும், ஆசீர்வாதமும் புதிதாகக் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த புதுமணத் தம்பதியினருக்கு இறைவனின் ஆசீர்வாதமாக அமைந்திருக்கும். இன்னுமொரு நபர் தமது திருமணத்தைச் சிக்கனமாக நடாத்தி அதில் சேமித்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமில்லாமல் மிக வறுமைக் கோடடின் கீழ் வாழும் 1000 மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களின் தேவை அறிந்து 10 இலட்சம் ரூபாவுக்குக் கற்றல் உபகரணங்கள், சூ, சொக்ஸ் மற்றும் கருவிகள், துவிச்சக்கர வண்டி இல்லாதவர்களுக்கு துவிச்சக்கர வண்டி, படிக்க மேசை, கதிரை இல்லாதவர்களுக்கு மேசை, கதிரை ஆகியனவம் வாங்கிக் கொடுத்தனராம்.

அவர் ஆடம்பரமில்லாமல் செய்ததை அந்த மக்கள் இன்றும் போற்றிப் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதைத்தான் ‘மக்கள் சேவை மசேசன் சேவை’ எனக் கூறுகின்றனர். இன்னும் சிலர் சிறிதாகச் செய்து பெரிதாக விளம்பரப்படுத்திச் செல்கின்றனர்.
வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஆடம்பரச் செலவுகள் தொடர்பாகச் இதே பத்திரிகையில் ‘சொல்லத் துடிக்குது மனசு’ என்ற தலைப்பில் 3 ஆம், 4 ஆம் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இன்று பலர் தமது வரவு, கையிருப்பைக் கருத்தில் கொள்ளாமல் மருங்கை, பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, 21 வது (Key Birthday) பிறந்த நாள், திருமணம், மறுவீடு செல்லல் (கால்மாறிப் போதல்), வீடு கட்டுதல், குடி புகுதல் ஆகிய நிகழ்வுகளை கடன் வாங்கி, வங்கியில் கடனெடுத்து ஆடம்பரமாகச் செலவு செய்து, பின்னாளில் கடனைச் செலுத்த முடியாமல், நாளாந்தச் செலவுக்கே கஷ்டப்படுகின்ற பலரைக் கண்டிருக்கிறோம். பணக்காரன், இலடசாதிபதி, கோடிஸ்வரர்கள் ஆடம்பரமாகச் செய்கின்றாரகள் என்பதற்காக நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களும் ஆடம்பரமாகச் செய்ய வெளிக்கிட்டு ‘ஆப்பிழுத்த குரங்கு போல்’ சந்தோசத்தைத் தொலைத்து நிற்கின்றனர். அதேபோல் பலர் மரண வீடுகளையும் திருமண வீடுகள் போல் ஆக்கிவிட்டனர். மரணச் சடங்கு, 31, 41 ஆம் நாள் மரணச் சடங்கு, ஆண்டமுது ஆகியவற்றுக்காகப் பலர் கண்டபடி செலவு செய்கின்றனர். ஏழு மரக்கறி கொண்டு சமைத்த உணவை விடுத்து பிறியாணிச் சாப்பாடும் கொடுக்கின்றனர்.

குடியிப்பதற்கு வீடு தேவை. அது உறங்க, வழிபட, சமைக்க, கழிக்க, குழிக்க என ஓரளவு வசதியோடு இருப்பது நல்லது. பலர் கடன் வாங்கி மாளிகை போல் வீட்டைக் கட்டிப் பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்டு கொண்டிருக்கிறோம். சிலர் வாழ்கை முழுவதும் சிரமப்பட்டு வங்கிக் கடன், நகை அடகு, அதுவும் போதாமல் சொத்துககளை விற்றும் வட்டிக்குக் கடன் எடுத்தும் பெரிய வீட்டைக் கட்டிவிட்டு, இறக்கும் வரை நிம்மதியில்லாமல் வாழ்ந்ததையும் கண்டிருக்கிறோம். இவ்வாறு சிந்தித்துச் செயற்படாமல் பலர் வாழ்க்கையில் தோல்வியடைந்து கொணடிருக்கின்றனர்.

அவரைப்போல் வீடு கட்ட வேண்டும், இவரைப்போல் வாகனம் வாங்க வேண்டும். நண்பனைப் போல் ஆடம்பரமாக வாழ வேண்டும். அவர் சபை நடத்தியது போல் தானும் நடத்த வேண்டும் என்றெல்லாம் நினைத்துச் செயற்படுகின்றனரே தவிர, புத்தி சாதுரியமாக யோசித்து வாழ்க்கைளைச் சீராகக் கொண்டு நடத்தப் பலர் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் தாய் தந்தையர் பிள்ளைகளுக்குத் தமது கஷ்டம், பட்ட துன்பங்களைச் சொல்லி வழப்பார்கள். இன்று அவ்வாறல்ல நான்பட்ட துன்பத்தைப் பிள்ளைகளும் படக்கூடாது என்பதற்காகச் செல்லம் கொடுத்து ஆடம்பரமாக வளர்க்கின்றனர். பல பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம், துன்பம் தெரியாமல் பெற்றோரை வாட்டி வதைக்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் சித்திரவதை, துன்பம், கஷ்டம் தாங்க முடியாமல் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது ‘உனது இன்றைய நிலைக்கு நீயெ காரணம்’ என சுவாமி விவேகாநந்தர் கூறியதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நன்றாக இருக்கும் கோயிலை இடித்துக் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், மண்டலாபிசேகம்,One Human Hand Helping Another Hand To Overcome His Fear Stock Photo -  Download Image Now - iStock சங்காபிசேகம், வருடாந்த ஊற்சவங்கள், விசேட பூசைகள், அபிசேகங்கள், பரிகார பூசைகள், விரதங்கள், ஏனைய பிழாக்கள், விசேட தினங்கள் என்பவற்றுக்காக ஆலயங்களில் வருடாந்தம் கோடிக் கணக்கில் செலவு செய்கின்றனர். ஊரில் இரு ஆலங்கள் உள்ளன. ஒன்று கல்வி வழங்கி அறிவைப் புகட்டி வாழ்க்கைக்கு வழிகாடடுகின்ற வித்தியாலயங்கள்.

இரண்டு ஆன்மீக உணர்வினையும், சமய, கலாசாரம்சார்ந்த ஒழுக்க விழுமியங்களையும் போதிக்க வேண்டிய ஆலயங்கள். இரண்டும் ஓர் ஊரின் இரு கண்கள் போன்றவை. பெரும்பாலும் பல ஆலயங்கள் இதனைச் செய்வதை விடுத்து, மக்களிடம் இருந்து நிதி அறவிடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. திருமூலர் கோயிலைப் ‘படமாடும் கோயில், நடமாடும் கோயில்’ என்கின்றார். அவர் கூறியதன் பொருள் பாம்பு படமாடும் போது ஓர் இடத்தில் நின்றே படமாடும். அதேபோல் கோயில் ஓர் இடத்தில் இருந்து சமூக வாழ்க்கைக்கு வேண்டிய ஆன்மீக, ஒழுக்க விழுமியங்களைப் போதிக்க வேண்டும் என்றும் அத்தகைய கோயில் சமூக நல்வாழ்வுப் பணிகளில் ஈடுபட வேண்டு்ம் எனவும், அத்தகைய கோயிலை நடமாடும் கோயில் எனவும் கூறினார். இவ்வாறு சமூகப் பணிகளில் ஈடுபடும் கோயில்கள் மிகமிகக் குறைவு என்றே கூறலாம்.

பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வருடம் முழுவதும் மூன்று அல்லது நான்கு விழாக்கள் மாத்திரமே உள்ளன. ஆனால் சமயத்தவரிடத்தில் கோயில்கள், இல்லங்கள், சமூகத்தில் என வருடம் முழுவதும் செலவை மையப்படுத்தியதாக நடந்து கொண்டே இருக்கும். ஆரிய, பிராண, திராவிடத் திட்டமிட்ட திணிப்பான வாக்ய, திருக்கணித பஞ்சாங்கங்களைப் புரட்டினால் வருடத்தில் 150 நாட்களுக்கு மேல் திதிகள், விரதங்கள், நிகழ்வுகள், சுபநாள், சுபமுகூர்த்தம், தோசங்கள் என செலவை மையப்படுத்திய நிகழ்வுகள் காணப்படும்.

இன்று சகலமும் வர்த்தகத்தை மையப்படுத்தியதாக நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட பல ஆயிரம் செலவிட்டு ஆரிய, வேத, ஆகம முறைப்படி யாகங்கள், பூசை, புனஸ்காரங்கள், தோச நிவர்த்திகள், கிரியைகள் செய்யும் பழக்கம் பெருகிவிட்டன. அதனால் ஒரு கூட்டம் அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திப் பணம் கறந்து கொண்டிருக்கின்றனர்.‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல்’ நிலமை ஆகிவிட்து. எல்லாமே செயவு மயம்.

பல கோயில்களில் பல கோடி ரூபாக்கள் கைவசம் உள்ளன. அப்பணம் முழுவதும் ஆடம்பரங்களுக்கும், கோயிலை இடித்துக் கட்டுதல், தீருத்துதல், விசேட கிரியைகள், ஆராதனைகள் செய்தல், குப்பாவிசேகம், மண்டலாபிசேகம், சங்காபிசேகம், விசேட பூசைகள் என்பவற்றுக்காகவும் பராமரிப்புப் பணிகளுக்காகவும் செலவு செய்யப்படுகின்றன. பெரும்பாலான ஆலய நிருவாகிகள் சமூகநலப் பணிகளில் ஈடுபடுவதை விடுத்து நிதி சேகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். திருவிழாக் காலங்களில் வான வேடிக்கை, சோடனை, ஆலயத்துக்கான பூசைச் செலவு எனப் பல இலட்சங்கள் செலவு செய்யப்படுகின்றன. இவ்வளவு பணமும் ஒவ்வொருவரும் தன்னை வருத்தி உழைத்த பணம். இந்தப் பணத்தை அறவிடுவதற்காக எத்தனை தடவை குறித்த வீடுகளுக்குச் சென்றிருப்பர்கள். சகலரும் தெய்வ காரியம் என்றெண்ணிக் கடன் வாங்கியாவது கொடுக்கின்றனர். இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் ஒரு பலவீனம்தான்.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றுவிட்டனர். மக்கள்மீது கருணை காட்டுவோம் என்றெண்ணி எந்தக் குருக்கள் திருவிழாவுக்கான திருவழாச் சீட்டில் (பட்டியல்) பொருடகளைக் குறைத்திருக்கின்றார்கள். தமக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தட்சணைப் பொருட்களும் இன்னமாதிரி இருக்க வேண்டும் எனப் பலர் கணக்குப் பார்க்கின்றனர். இத்தனையும் கொடுத்தம் தமது பணியைப் பல குருக்கள்மார் சிறப்பாகச் செய்வதில்லை. சமஸ்கிருத சுலோக உச்சரிப்புத் தவறு, சுலோகத்தை வாய்க்குள் முணுமுணுத்தல், இரண்டு மணித்தியாலம் செய்ய வேண்டிய கிரியையை ஒரு மணித்தியாலத்தோடு முடித்தல். தப்பான படிமுறையில் கிரியைகளைச் செய்தல், தமக்கும் பங்கு கோரல். ஏனோ தானோ எனக் கிரியைகளைச் செய்தல், கோயில் நிர்வாக சபையினருக்குக் கட்டுப்படாதிருத்தல், ஒரு கொயிலில் திருவிழாச் செய்வதற்குரிய காப்புக் கட்டடிய பின்னர் வருமானத்துக்காக இன்னுமொரு கோயிலில் சென்று கிரியை செய்தல். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் உதவிக் குருக்கள்மாரை அழைத்து வரல் எனப் பல குருக்கள்மாரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

அண்மையல் கேதார கௌரி விரதத்தக்குப் பொருள் கொள்வனவில் பங்கு பிரிப்பது தொடர்பாகசிக்கனம் சிறப்பான வாழ்வைத்தரும்! நகரிலுள்ள கோயில்களுக்குப் பூசைப் பொருட்களை வழங்கும் கடைக்கு முன்னால் கோயில் தர்மகர்த்தாவுக்கும், ஆலயக் குருக்களுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் நடந்தது அப்பிரச்சினையை மக்கள் தீர்த்து வைத்தனர். “நான் இல்லாமல் விரத பூசையை எவ்வாறு நடத்தினீர்கள்” எனக் குருக்களும், “நாங்கள்தான் உங்களைப் பூசை செய்வதற்கு அமர்த்தி இருக்கிறோம். நாங்கள் உன்னைப் பூசகராகப் பணிக்கு அமர்த்தாமல் இருந்திருந்தால் இவ்வளவு தட்சணையும், வீதப் பணமும் உமக்குக் கிடைத்திருக்குமா” என தர்மகர்த்தாவும் கூறி நாரடித்துவிட்டனர். இவ்வாறு பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு ஒருசில குருக்கள்மார் செய்யும் இத்தகைய செயலினால் கோயில்களுக்கும் குருக்கள்மாருக்கும் நிர்வாக சபையினருக்கும் இழுக்கு ஏற்படுகின்றன.

இன்னும் சில வேடிக்கைகளும் நடக்கின்றன. பூசைக்கும் கிரியைகளுக்கும் ஐயர்மாரிடம் கொடுக்கும் பொருட்களில் பலவற்றைத் திருடிவிட்டுச் சிலவற்றைக் கொண்டே கிரியைகளை நடாத்துகின்றனர். திருடிய பொருட்களை இன்னோர் இடத்தில் கிரியைகள் செய்வதற்காகக் கொண்டு செல்கின்றனர். பல அலயங்களில் உற்சவ காலத்தில் திருப்பணிச்சபையின் மூலம் மூலமூர்த்திகளும், தெங்வங்களும் ஒலிபெலுக்கியில் கூறி விற்கப்படுகின்றனர். விருப்பு, வெறுப்புக்கள், ஆசாபாசம் யாவும் கடந்த கடவுளர்களையும் தெய்வங்களையும் கூறிவிற்பது வேடிக்கையாக உள்ளது. சில இடங்களில் குறுக்கள்மாரே தவறுகளை செய்து பரிகார பூசைகளுக்கும் செலவு வைக்கின்றனர். சில குருக்கள்மார் நிர்வாக சபையினரைக் கைக்குள் வைத்துக் கொண்டு பல தவறுகளைச் செய்கின்றனர்.

கோயில்களில் வருடாந்த உற்சவம் ஆரம்பித்து விட்டால் முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள், முன்னுரிமை பெறல், சாதி, குடி, குலம், கோத்திரம், சாகியம் என்பவற்றைப் பேசிப் பல குழப்படிகளையும். அடிதடி, வெட்டுக் கொத்துக்களையும் உருவாக்கி விடுகின்றனர். அமைதியின் உறைவிடமான பல கொயில்கள் சாதி. சட்டம், சம்பிரதாயம் பேசி நீதிமன்றங்களில் நிற்கிறது. இன்று பல கோயில்கள் சமூகப் பிரச்சினைகளின் உறைவிடமாகத் திகழ்கின்றன.

ஆலயங்களை அமைதியின் உறைவிடமாகவும், ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டும் இடமாகவும், சமூக, சமய, கலாசாரம், சம்பிரதாயம், பழக்க வழக்கங்களைப் பேணிப் பாதுகாக்கின்ற மையங்களாகவும், சமூக நல்வாழ்வுப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களாகவும் மாற்றிக் கொள்வதற்கு ஆலய பரிபாலன சபையினர் முன்வர வேண்டும். ஆடம்பரங்களைக் குறைத்துச் செலவுகளைச் சிக்கனமாகச் செலவிட்டு குறிப்பிட்ட வீத நிதியை பிள்ளைகளின் கல்விப் பணிக்காக ஒதுக்க வேண்டும். கிரியைகளுக்குக் குருக்கள்மார் குறிப்பிடும் பொருட்களின் சிட்டையை 40 வீதத்தினால் குறைக்கப் பரிபாலன சபையினர் முயற்சிக்க வேண்டும். கிரியை முறைகளை முற்று முழுதாக அறிந்த குருக்கள்மாரை ஆலயங்களில் நியமிக்க முன்வர வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் தேவையற்ற அன்னதானங்களைக் குறைத்து அந்த நிதியைச் சிறுவர், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றவர்களுக்குக் கொடுக்க முன்வரவேண்டும். ஆலயங்களில் அன்னதானமாகப் புறியாணிச் சாப்பாடு கொடுப்பதனை முற்றாக நிறுத்த வேண்டும். வழிப் போக்கன், பாதயாத்திரை செய்வோர ஆகியோருக்கு அன்னதானம் கொடுப்பது சிறந்தது. வருடாந்த உற்சவத்தின் போது தொலை தூரங்களில் இருந்து அடியார்கள் வருவதனால் அவர்களுக்கும் அன்னதானம் கொடுக்கலாம். இன்று கிராமக் கோயில்களில் அன்னதானம் கொடுப்பதும், புறியாணிச் சாப்பாடு கொடுப்பதும் ஆடம்பரமாகிவிட்டது.

அன்னதானம் கொடுக்காவிட்டால் கோயில்களுக்கு அடியார்களின் வரவு குறைந்து விடுவதாகப் பலரும் கூறுவதையும் அறிய முடிகிறது. இத்தகைய நடவடிக்கைகள் இறைபக்தியைச் சீர்குலைத்து, ஆலயங்களின் ஆன்மிகப் பயணத்தை வேறு திசைக்கு இட்டுச் செல்லும். தூய்மையான பக்தி மார்க்கத்துக்குச் சவால் விடுவதாக அமைந்துவிடும் எனப் பலரும் கவலை கொள்கின்றனர். அதனாலேயே மகாகவி பாரதி அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதையும் விட “அன்னயாவிலும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்” எனக் கூறினார். எனவே, இன்றைய காலகட்டத்தில் செலவுகளைச் சிக்கனமாகச் செய்து, புத்திசாதுரியமாகச் சகலரும் நடந்து கொள்வதே பொருத்தமானதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button