உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏசி பாதுகாப்பானதா?

கோடைகாலத்தின் வெப்ப தாக்கத்தால் மக்கள் ஏசியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் இது உயர் ரத்த அழுத்த நோயாளிக்கு ஏற்றதா என்பதை மருத்துவர் விளக்கி உள்ளார்.
ஏசி
ஒரு சில நோய் உள்ளவர்களுக்கு ஏசி சிறந்தது இல்லை. அந்த வகையில் மருத்துவ விளக்கப்படி உயர் ரத்த அழுத்தம் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் ஏசியை பயன்படுத்தலாமா என்பது விளக்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம்
தற்போது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏசி பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை பற்றி டாக்டர் பினய் குமார் பாண்டே விளக்கி உள்ளார். அதாவது உயர் ரத்த அழுத்தம் அதிக வெப்பநிலையில் மட்டுமே உடலுக்கு கூடுதல் அழுத்தத்தத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

வெப்பம் அதிகரிக்கும்போது உடல் தன்னை குளிர்விக்க இரத்த நாளங்களை விரிவாக்கி அதிக வியர்வை உண்டாக்குகிறது. இதனால் நீரிழப்பு, இரத்த அழுத்த மாற்றங்கள், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே ஏசி பயன்படுத்துவது இதயத்திற்கு நன்மை தரக்கூடியது என்றும், அறை வெப்பநிலையை கட்டுப்படுத்துவதன் மூலம் இதயத்தின் அழுத்தம் குறைய உதவுகிறது என்றும் அவர் கூறி உள்ளர்.

ஆனால், மிகக் குறைந்த வெப்பநிலை அல்லது வெளியிலிருந்து உள்ளே வரும் திடீர் வெப்ப மாற்றம் இரத்த நாளங்களை சுருக்கி இரத்த அழுத்தத்தை பாதிக்கக்கூடும் எனவும் கூறி உள்ளார்.
![]()