இரவில் எவ்வளவு நேரம் தூங்குறீங்க… இளைஞர்களே உங்களுக்குத் தான்

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இளம் வயதினர் இரவு நேரத்தில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தூங்காமல் கழியும் இரவுகள்
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் இரவில் சரியாக தூங்குவது கிடையாது. வேலை நிமிர்த்தமாக சிலர் தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் மொபைல் போனை பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்திவிடுகின்றனர். பின்பு 2 அல்லது 3 மணிக்கு தூங்க செல்கின்றனர்.
தூக்கத்தின் முக்கியத்துவத்தினை இன்று பலரும் மறந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். சாதாரணமாக ஒரு நபர் இரவில் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்பது நம்மில் அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் குறைந்த பட்சம் 5 அல்லது 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் தூக்கம் என்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.
ஐடி துறையில் வேலை செய்பவர்கள் இரவு பணியினால் தூங்காமல் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது அதுவே பழக்கத்திற்கும் வந்துவிடுகின்றது.
சரியான தூக்கம் என்பது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை அவ்வளவு எளிதாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை.
இந்நிலையில் சர்வதேச அமைப்பு ஒன்று இளம்வயது ஆண் மற்றும் பெண்களிடம் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அதில் ஏழுமணி நேரம் தூங்குபவர்களின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், அவரது இதயத்துடிப்பும் சீராக இயங்குவதாகவும் கூறியுள்ளனர்.
அதே போன்று 7 மணி நேரம் தூங்குபவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாணவர்களாக இருக்கின்றார்களாம்.
இளம்வயதில் உடலுக்கு தேவையான வளர்ச்சியினை பெறுவதற்கு கட்டாயம் 7 மணி நேரம் தூங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
![]()