பலதும் பத்தும்

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா?

பொதுவாகவே ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அது கொண்டிருக்கும் விஷம் தான்.

காரணம் உலகில் எத்தனையோ வேட்டை விலங்குகள் மற்றும் விஷ பூச்சுகள் இருந்தாலும் தொன்று தொட்டு பாம்புகள் மீது மனிதர்களுக்கு இருக்கும் பயம் அளப்பரியது.

என்னதான் பாம்புகள் மனிதர்கள் உட்பட பல விலங்குகளையும் தன் விஷத்தால் சில நிமிடங்களிலேயே கொள்ளும் ஆற்றலை கொண்டிருந்தாலும், பாம்புகளையே சண்டையிட்டு கொல்லக்கூடிய விலங்குகளும் பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

அப்படி பாம்புகளை கொல்லக்கூடிய விலங்கு மற்றும் பறவைகள் குறித்து இந்த பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா? | Which Animal And Birds Can Kill A Snake Easily

1.கீரி

கீரி வேகம் மற்றும் பயமற்ற விஷயத்தில் பாம்பை மிஞ்சியது. இது சுர்மையான பற்களை கொண்டு பாம்பை தாக்குவதால் பாம்புகள் கீரிகளிடம் பெரும்பாலும் கட்டுப்படுகின்றது.

2. ஹனி பேர்ஜர்

இந்த விலக்கு அடர்த்தியான தோல் அமைப்புடன் இருக்கும். அதனால் இதை எந்த விஷங்கொண்ட விலங்கு கடித்தாலும் கவலைப்படதேவையில்லை. இவை கூர்மையான பற்கள் மற்றும் நகங்களை கொண்டு பாம்பை தாக்கி எளிதில் கொல்கின்றது.

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா? | Which Animal And Birds Can Kill A Snake Easily

3.செயலாளர் பறவை

ஆபிரிக்காவில் மிகவும் வேட்டையாடும் சக்தி கொண்ட பறவையாக அறியப்புடும் செயலாளர் பறவை (Secretarybird) நீண்ட கால்களை கொண்டு பாம்புகளை தாக்குறது. மேலும் இது நாக பாம்பு கொல்வதில் சிறப்புமிக்கது.

4.ராஜ நாகம்

இது முரண்பாடாக இருக்கலாம் ஆனால் ராஜ நாகங்கள் பாம்புகளை கொல்வதில் சிறப்பு வாய்ந்தது. இது மற்றைய பாம்புகளை வேட்டையாடும் இயல்பு கொண்டது.

5.கழுகு

கழுகுகள் பாம்பை வேட்டையாடுவதில் பெயர் பெற்றவை இதில் தங்க கழுகு சிறப்பு வாய்ந்தவை. இதன் கூர்மையான நகங்களுடன் இருப்பதால் அது பாம்பை மட்டுமல்ல எந்த விலங்கையும் எளிதாக வேட்டையாடும்.

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா? | Which Animal And Birds Can Kill A Snake Easily

6.முள்ளம்பன்றி இது பார்ப்பதற்கு சிறியவை தான். ஆனால் விஷத்தன்மையான முட்கள் இதனிடத்தில் காணப்படுகின்றன. இவை பாதுகாப்பிற்கு தங்களின் பற்கள் மற்றும் முதுகெலும்பை பயன்படுத்துகின்றன. அதனால் பாம்புகளை இவற்றால் எளிதில் கொல்ல முடியும்.

7.காட்டுப்பன்றி

காட்டுப்பன்றி சண்டையில் நல்ல உட்சாகத்தை காட்டும். அடர்த்தியான தோல் மற்றும் தாடைகளை கொண்டுள்ளது. இவைகள் பாம்புகளை நசுக்கி சாப்பிடுவதில் கில்லாடிகளாக அறியப்படுகின்றது.

8.மயில்

மயில் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட  இவை குறிப்பாக நாக பாம்புகளை குறிவைத்து தாக்கும் தன்மை கொண்டது. இவற்றின் துணிச்சலான அணுகுமுறையால் பாம்புகளை எதிலில் தாக்கும்.

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா? | Which Animal And Birds Can Kill A Snake Easily

9.ரோட்ரன்னர்

நாம் கார்டுன்களில் பிரபலமாக விரும்பி பார்க்கப்படும் ஒரு விலங்கு தான் ரோட்ரன்னர்கள். இவை ஒரு பாம்பு கொல்லிகள். அமெரிக்காவில் தென்மேற்கு பகுதியில் காணப்படுகின்றன. இது பாம்பின் தலையை பாறையில் அடித்து அடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை. 

10. ஓபோசம்

இது இரவு நேரத்தில் நடமாடும் ஒரு விலங்கினமதக அறியப்படுகின்றது. இதுவும் ஓரளவு விஷத்தன்மை கொண்ட உயிரினம் தான். இந்த மிருகங்களுக்கு திருட்டுத்தனம் அதிகம் என்பதால்,  இவை பாம்பை வெல்லும் அளவுக்கு ஆற்றல் கொண்டவையாக  திகழ்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *