பலதும் பத்தும்

பிள்ளையார் ஆலயத்தில் 50 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின் 5ம் நாளாகிய நேற்றிரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது விநாயகர் பெருமானுக்கு சாத்திய மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இருவர் இணைந்து குறித்த தொகையினை ஏலத்தில் பெற்றதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயம், அப்பகுதியின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்போது மாம்பழம் ஏலம் விடப்படுவது சிறப்பம்சமாகும், இது பெரும் தொகையாக 50 இலட்சத்து 6000 ரூபா ஏலம் போனதாக அறியப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *