இந்தியாவின் முதல் கடல் விமானம் – வெற்றிகரமாக சோதனை

இந்தியாவில் நீர்நிலைகள் அதிகம் உள்ள, விமான நிலையம் அமைக்க முடியாத இடங்களில் கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
சமீபத்திய திருத்தப்பட்ட உடான் திட்டத்திலும் கடல் விமான போக்குவரத்துக்கு அரசு முக்கியத்துவம் அளித்தது.
இந்தியாவின் முதல் கடல் விமானம்
தற்போது இந்தியாவின் முதல் கடல் விமான சேவை நிறுவனமாக SkyHope Aviation நிறுவனம் உருவெடுத்துள்ளது.

இந்த நிறுவனம், தனது முதல் கடல் விமான தரையிறக்கம் மற்றும் புறப்படுதல் ஆகியவற்றை ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பறப்பில் ஈடுபட்டிருந்த விமானம் கங்கை தடுப்பணையில் தரையிறங்கி வெற்றிகரமாக மேலெழும்பியது.
விமானப் போக்குவரத்தை நிறுத்தியிருந்த, முந்தைய ‘ஃப்ளை பிக்’ விமான நிறுவனத்திற்குச் சொந்தமான டர்போப்ராப் விமானத்தில் மிதவைகளை பொருத்தி கடல் விமானமாக மாற்றியுள்ளனர்.
DGCA யிடம் இருந்து உரிமம் பெற்றவுடன், 19 இருக்கைகள் கொண்ட விமானத்துடன் முதற்கட்டமாக லட்சதீவுகளில் உள்ள 5 தீவுகளில் இயக்கப்பட உள்ளது.

கடல் விமானங்கள் புதிய வழித்தடங்களைத் திறக்க முடியும், பயண நேரத்தைக் குறைக்க முடியும், மேலும் பல தொலைதூரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் நெருக்கமாக இணைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
![]()