சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் நேர்மை பற்றி தெரியுமா?; பலரும் அறியாத தகவல்!

பொதுவாக காட்டில் எத்தனையோ விலங்குகள் இருந்தாலும் சிங்கத்தை தான் காட்டுக்கு ராஜா என இன்றளவும் குறிப்பிடுகின்றோம்.
சிங்கத்தை விடஉடல் அளவில் பெரியது தான் யானை, சிங்கத்தை பார்க்கிலும் அதிக வேட்டை திறன் கொண்டது தான் புலி, சிங்கத்தை விடவும் வேகமாக ஓடக்கூடியது தான் சிறுத்தை.
சிங்கத்தை விடவும் ஏன் அனைத்து விலங்குகளை விடவும் புத்திசாலித்தனம் கொண்ட விலங்கு தான் கொரில்லா இருப்பினும் சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என தொன்று தொட்டு வர்ணிக்கப்படுகின்றது.

பசி இல்லாத போது மற்ற விலங்குகளை தொந்தரவு செய்வதும் கிடையாது. அவ்வாறான தனித்துவ குணங்கள் தான் சிங்கம் இன்றுவரை காட்டுக்கு ராஜா என புகழின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம்.
ஓநாயின் தனித்துவ குணங்கள்
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை கூட சர்க்கஸில் பார்க்க முடியும். ஆனால் ஓநாயை யாரைாலும் கட்டுப்படுத்தவே முடியாது.

ஓநாய்கள் தங்களுக்கு கடுமையாக பசிக்கும் பட்டசத்திலும் கூட இறந்த இரையை சாப்பி்டாது. அப்போதே புதிதாக வேட்டையாடிய இரையை மட்டுமே சாப்பிடும்.

ஓநாய் கூட்டத்தில் ஒரு ஓநாய் இறந்துவிட்டால் கூட்டடமாக சேர்ந்து தான் அஞ்சலி செலுத்தும்.
எல்லாவற்றையும் விட மனிதர்களிலும் மேலாக ஓநாய்கள் ஒரே துணையுடன் தான் தங்களின் வாழ்க்கை முழுவதும் வாழ்கின்றன.
![]()