பலதும் பத்தும்

X தளத்தில் இனி வீடியோ லிங்குகளை Copy செய்ய முடியாது; பரவும் வதந்தி

எலான் மஸ்க்கின் ‘X’ தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து, பயனர்கள் மத்தியில் பெரும் விவாதம் உருவானது. இருப்பினும், இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு யாரோ விளையாட்டாக பரப்பிய தகவலாகும். X’ தளத்தில் இப்போதும் பயனர்கள் வழக்கம்போல வீடியோ லிங்குகளை காப்பி செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

எந்தவொரு புதிய மாற்றமும் இந்த அம்சத்தில் கொண்டு வரப்படவில்லை. எனவே, வைரலான அந்த பதிவு உண்மைக்கு புறம்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *