பலதும் பத்தும்

ஆண்களைக் குறிவைக்கும் மாரடைப்பு; 35 வயதில் தொடங்கும் பேராபத்து !

“மாரடைப்பு என்பது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது” என்ற பழைய நம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளது புதிய ஆய்வறிக்கை ஒன்று.

அமெரிக்க இதய சங்கத்தின் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி,

ஆண்களுக்கு 30 வயதிலிருந்தே இதய நோய் அபாயம் தொடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

சுமார் 5,000 பேரை 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய அம்சங்களாவன,

பெண்களை விட 7 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு இதய நோய் அபாயம் 5%-ஐ எட்டுகிறது.

குறிப்பாக, ரத்த நாளங்கள் பாதிப்படைவது ஆண்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குகிறது.

35 வயதிற்குப் பிறகு இந்த அபாயம் வேகமாக அதிகரிக்கிறது.

எந்தவித வெளிப்படையான அறிகுறிகளும் இன்றி இது ஏற்படுவதால், பல நேரங்களில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாகின்றன.

மேற்கத்திய நாடுகளை விடத் தெற்காசியர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த ஆபத்து இன்னும் முன்கூட்டியே நிகழ்கிறது என எய்ம்ஸ் (AIIMS) மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்ற காரணிகளுடன் புகைப்பிடித்தல் மிகமுக்கியமான வில்லனாக உருவெடுத்துள்ளது.

30 வயதைத் தாண்டியும் புகைப்பழக்கத்தை விடாதவர்களுக்கு இதயத் தசைகள் பலவீனமடைந்து, திடீர் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.

🛡️ தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர்களின் அறிவுரைப்படி,

30 வயதிலிருந்தே ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளைத் தொடங்குங்கள்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அவசியம்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *