ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க

பொதுவாகவே ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களை அதிகளவில் கொண்டிருக்கும் காய்கறிகளின் பட்டியலில் பாகற்காய் முக்கிய இடம்வகிக்கின்றது.
பாகற்காயில் அதிகளில் வைட்டமின் சி சத்து, நார்ச்சத்து காணப்படுவமதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் செரிமான அமைப்பை சீராக்குவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பரிந்துரை செய்யப்படும் காய்கறியாகும். உடலில் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதால் உடலில் உள்ள பல பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.

அதேநேரத்தில், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. ஆரோக்கியமாக உடல் எடையைப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு பாகற்காய் வரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

பாகற்காய் – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – ½ தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
புளி – பெரிய எலுமிச்சை அளவு (கரைத்தது)
வெல்லம் – 50 கிராம்
அரிசி – 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு – ½ மேசைக்கரண்டி
கடலை பருப்பு – ½ மேசைக்கரண்டி
கசகசா – ½ தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை
கடுகு – ½ தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தே.கரண்டி
சீரகம் – ½ தே.கரண்டி
பெருங்காயம் – ½ சிற்றிகையளவு
கருவேப்பிலை – 1 ஒரு கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அரிசி மற்றும் கசகசா சேர்த்து நன்றாக வாசனை வரும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆதியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.

அவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.
கடுகு பொரிந்ததும் சீரகம், மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் நறுக்கி வைத்த பாகற்காயையும் சேர்த்து நன்றாக வதக்கியெடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை நன்றாக வெந்து குழைந்து வந்ததும் புளி கரைசலை சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு, வெல்லத்தை பொடி செய்து சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.
தொக்கு பதத்துக்கு வந்ததும் அரைத்து வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கெட்டிப்படும் போது இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாகற்காய் தொக்கு தயார்.
![]()