பலதும் பத்தும்

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க… உடல் உறுப்புகள் பாதிப்பாக இருக்கலாம்

மனிதர்களின் உடலில் சில அறிகுறிகள் எந்தெந்த உறுப்பு பாதிக்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் எந்தெந்த உறுப்புகளுக்கு எப்படிப்பட்ட அறிகுறிகள் தென்படும் என்பதை பார்ப்போம்.

மனித உறுப்புக்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானதாகும். அதாவது உயிர்வாழ்வதற்கு முக்கியமாக இருப்பதே உடல் உறுப்புக்கள் தான்.

உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்றால் நமது செயல்பாடுகளும், உணவுமுறைகளும் சரியாக இருக்க வேண்டும்.

சில அறிகுறிகளைக் கொண்டு உடல் உறுப்புகளின் பிரச்சனையை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் எந்தெந்த உறுப்பு பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

உடல் உறுப்பு

கல்லீரல்: கல்லீரல் பிரச்சனை என்றால் எந்தவொரு அறிகுறியும் ஆரம்பத்தில் இல்லாமல் இருக்கும். கடுமையாக பாதிக்கப்பட்ட பின்பே வலி ஏற்படும். ஆனால் சோர்வு, மூளை மந்தம், சரும அரிப்பு இவைகள் ஆரம்ப அறிகுறியாகும்.

இதயம்: இதய பாதிப்பு ஏற்படுகின்றது என்றால் சோர்வு, லேசான மார்பு அழுத்தம், மூச்சுதிணறல், மயக்கம் போன்ற அறிகுறிகளை வைத்து பிரச்சனையை அறிந்து கொள்ள முடியும்.

சிறுநீரகங்கள்: கல்லீரல் போன்று சிறுநீரகமும் ஆரம்பகால அறிகுறிகள் எதுவும் இருக்காது. கண் மற்றும் குதிகால் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கண்ணில் கருவளையம் ஏற்படுதல் இவைகளே ஆரம்ப அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... உடல் உறுப்புகள் பாதிப்பாக இருக்கலாம் | Symptoms Of Body Organs

 

கணையம்: சர்க்கரை அளவில் மாற்றம் காணப்பட்டால் கணையத்தில் பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதிகமாக இனிப்பு சாப்பிடும் ஆசை, அடிக்கடி தாகம், திடீர் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும்.

தைராய்டு: தைராய் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் செயல்பாட்டில் கட்டுப்பாடு ஏற்படுமாம். மேலும் முடி உதிர்வு, மனநிலை மாற்றம், உடல் குளிர்ச்சியாக இருப்பதாக உணர்வது, காரணமில்லாமல் உடல் எடையில் மாற்றம் இவைகள் முக்கிய அறிகுறியாகும்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... உடல் உறுப்புகள் பாதிப்பாக இருக்கலாம் | Symptoms Of Body Organs

பித்தப்பை: பித்தப்பையில் கற்கள் பிரச்சனையாக இருந்தால் எந்தவொரு அறிகுறி தென்படாது. கொழுப்பு வகை உணவினை சாப்பிட்ட பின்பு வயிறு வீக்கம், வாந்தி உணர்வு, அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நுரையீரல்: நுரையீரலும் அதிக பாதிப்பிற்கு பின்பு தான் தெரியவரும். மூச்சுத்திணறல், சக்தி குறைவு, மார்பு இறுக்கம் இவை ஆரம்ப அறிகுறியாக இருக்கின்றது.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... உடல் உறுப்புகள் பாதிப்பாக இருக்கலாம் | Symptoms Of Body Organs

பெருங்குடல்: பெங்குடல் உள் அழற்சி மறைந்திருக்கும் நிலையில், வயிறு வீக்கம், மலச்சிக்ல், தோல் பிரச்சனைகள் ஏற்படும்.

வயிறு: வயிறு தொடர்பான பிரச்சனை என்றால், அமிலம் மேலே வருதல், ஊட்டச்சத்து குறைபாடு, குறைவாக சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு, வயிறு வீக்கம் ஏற்படும்.

 

மூளை: மூளையில் பிரச்சனை என்பதற்கு மறதி, எரிச்சல், சிந்தனை மந்தம், கவனக்குறைவு ஆகிய அறிகுறிகளாக வெளிப்படும்.

ரத்த நாளங்கள்: ரத்த நாளம் பிரச்சனை ஏற்பட்டால், கைகள், கால்கள் குளிர்ந்து விடுவது, உணர்வு இழப்பு, உடற்பயிற்சி செய்ய முடியாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *