பலதும் பத்தும்

வடக்குக்கான ரயில் சேவை ஏப்ரல் 9 முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஆசன முன்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், புகையிரதக் கடவைகளைக் கடப்பவர்கள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *