இலங்கை

சிங்கப்பூரிலிருந்து விரைவில் இலங்கை திரும்பவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அறுவை சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, வைத்தியசாலையிலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் சில நாட்கள் வைத்திய கண்காணிப்பில் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்ப வேண்டும் என்று பலர் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் சிங்கப்பூரில் சிறிது காலம் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விரைவில் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவர் வீட்டிலிருந்தே அரசியல் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஐக்கிய தேசியக்கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் தமது பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *