பாலைவன மணலில் சாலை – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் ‘ரைசிங் சாண்ட்’ என்ற புதிய இயந்திரம் ஜப்பானில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
பாலைவன மணல்
‘ரைசிங் சாண்ட்’ (Rising Sand) எனப்படும் இந்த நவீன தொழில்நுட்பம் மூலம், இதுவரை பயன்படாமல் இருந்த பாலைவன மணலைக் கொண்டு உயர்தர சாலைகள் அமைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கட்டுமானப் பணிகளில் ஆற்று மணல் மற்றும் கற்களை உடைத்து பெறப்படும் ஜல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் உலகில் அதிகமாகக் கிடைக்கும் பாலைவன மணல், அதன் துகள்கள் மிக நுணுக்கமாகவும் உருண்டையாகவும் இருப்பதால் சிமெண்டுடன் நன்கு ஒட்டாது. இதனால் அது கட்டுமானத்துக்கு பொருத்தமற்றதாக கருதப்பட்டது.
இதில் பாலைவன மணல் துகள்களை ஒருங்கிணைத்து வலுவான செயற்கை ஜல்லிகளாக மாற்றுகின்றனர். இதன் மூலம் கட்டுமானத்திற்குத் தேவையான உறுதியான அடித்தளம் உருவாக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அமைக்கப்படும் சாலைகள், பாரம்பரிய முறையில் அமைக்கப்படும் சாலைகளை விட மூன்று மடங்கு அதிக உறுதியுடனும், சுமார் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறனுடனும் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
![]()