பலதும் பத்தும்

சிலிண்டர் கொடுத்தால் தினமும் இலவச பிரியாணி – உணவகத்தின் சலுகை

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, சிலிண்டர் கொடுத்தால் இலவச பிரியாணி வழங்குவதாக உணவகம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் காரணமாக ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் LPG சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு விநியோக பயன்பாட்டிற்கு விநியோகத்தில் முன்னுரிமை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காமல் பல உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒசூரில் இயங்கி வரும் ஈரோடு அம்மாயி மெஸ் என்ற உணவகம் ஒரு வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு, தினமும் ஒருவேளை இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்ற சலுகையை வழங்கியுள்ளது.

இந்த சலுகை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதுவரை 6 பேர் சிலிண்டர்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *